கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடலூரில் பேருந்தில் ஒருவருக்கு கொரோனா.. ரகசியத்தை போட்டுடைத்த கன்டக்டர்.. ஓட்டம் பிடித்த பயணிகள்

Google Oneindia Tamil News

கடலூர்: கடலூரில் அரசு பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து சக பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடலூரைச் சேர்ந்தவர் 57 வயது நபர். இவர் காசநோய் இருப்பதால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கடலூர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வருவதற்கு முன்னர் இவர் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

சதாப்தி ரயிலில் பயணம் செய்த நபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. குறுஞ்செய்தியால் திடுக்.. 20 பயணிகள் தனிமைசதாப்தி ரயிலில் பயணம் செய்த நபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. குறுஞ்செய்தியால் திடுக்.. 20 பயணிகள் தனிமை

சோதனை முடிவுகள்

சோதனை முடிவுகள்

அப்போது கொரோனா சோதனை முடிவுகள் வரும் வரை வீட்டை விட்டு எங்கும் செல்லக் கூடாது என்று அவருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். இந்த நிலையில் இவர் தனது மனைவியுடன் பண்ருட்டியில் உள்ள கடம்புலியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு திங்கள்கிழமை அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் போன் செய்தனர்.

57 வயது நபர்

57 வயது நபர்

அப்போது அவருக்கு கொரோனா இருப்பதாக மறுமுனையில் பேசியவர் கூறினார். இதனால் அந்த 57 வயது நபர் அதிர்ச்சி அடைந்தார். உடனே நீங்கள் எங்கே இருக்கிறீர்கள். அங்கேயே இருங்கள். வேறு எங்கும் போக வேண்டாம் என அந்த அதிகாரி தெரிவித்தார். அப்போது அந்த 57 வயது நபர் தான் பேருந்தில் பயணம் செய்வதாக தெரிவித்தார்.

சோதனை

சோதனை

உடனே அதிகாரி சரி எந்த இடத்தில் பஸ் சென்று கொண்டிருக்கிறது என கூறுமாறு கேட்டுள்ளார். எந்த இடம் என்பது அவருக்கு தெரியவில்லை என்றார். உடனே அதிகாரி பேருந்து கன்டக்டரிடம் போனை கொடுக்குமாறு கூறினார். அவரும் கன்டக்டரிடம் போனை கொடுத்தார். அப்போது அந்த நபருக்கு கொரோனா இருப்பதாகவும் பேருந்தில் உள்ளவர்கள் அனைவரையும் சோதனை செய்ய வேண்டும் என்றும் அதிகாரி கூறினார்.

மாம்பட்டு

மாம்பட்டு

மேலும் பேருந்தை மாம்பட்டில் நிறுத்தி வைக்குமாறும் கூறினார். இந்த செய்தியை கேட்டவுடன் கொரோனா நோயாளி பயன்படுத்திய போனை தான் பயன்படுத்திவிட்டோமே என அச்சமடைந்த கன்டக்டர் பேருந்தில் கொரோனா நோயாளி இருப்பதாக கத்திவிட்டார். இதனால் அலறியடித்த பேருந்து பயணிகள் ஓட்டம் பிடித்தனர்.

கிருமிநாசினி

கிருமிநாசினி

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அவரையும் அவரது மனைவியையும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் டிரைவர் மற்றும் கன்டக்டர் ஆகியோர் வடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சோதனை செய்து கொள்ளுமாறு தெரிவித்தனர். இதையடுத்து கிருமிநாசினி தெளிப்பதற்காக பேருந்து பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

English summary
A passenger gets Covid test results after he was travelling in a bus near Cuddalore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X