கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடிக்காம இருக்க முடியலை.. டாஸ்மாக்கை உடைத்து 2.5 லட்சம் "சரக்கு" திருட்டு.. குடிகாரர்கள் அட்டகாசம்!

Google Oneindia Tamil News

கடலூர்: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் 2 டாஸ்மாக் கடைகளை உடைத்து ரூபாய் 2.30 லட்சம் மதிப்புள்ள மதுப்பாட்டில்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 2,301 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸால் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

A tasmac in Cuddalore district has been broken into and stolen liquor bottles

அதன் ஒரு பகுதியாக வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், குடிகாரர்களும் இந்த ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குடிகாரர்களின் தேவையை பயன்படுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமூக விரோதிகள் கள்ளத்தனமாக அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்து வருகின்றனர். மேலும் கள்ளச்சாராயம் விற்பனையும் ஆங்காங்கே அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே கேரள மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக குடிக்க முடியாததால் சிலர் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து மது விற்க கேரள அரசு முடிவு செய்தது. எனினும், இந்தத் திட்டத்துக்கு மூன்று வாரங்கள் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

A tasmac in Cuddalore district has been broken into and stolen liquor bottles

இந்நிலையில் நெய்வேலி பகுதியில் 2 டாஸ்மாக் கடைகளை உடைத்து ரூபாய் 2.30 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். நெய்வேலி ஊமங்கலம் காவல் நிலையத்திற்குட்பட்ட கிழக்கிருப்பு கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இதேபோல் நெய்வேலி, தொ்மல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட 21 ஆவது வட்டத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

A tasmac in Cuddalore district has been broken into and stolen liquor bottles

இதனை பயன்படுத்தி நேற்று இரவு கிழக்கிருப்பு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை கதவை உடைத்து அதிலிருந்த ரூபாய் 1.70 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களையும், 21 ஆவது வட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடையை உடைத்து ரூபாய் 60 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து ஊ.மங்கலம் மற்றும் தொ்மல் காவல்நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

English summary
A tasmac shop in Cuddalore district has been broken into and stolen liquor bottles
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X