கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என் தம்பி 2021ல் முதல்வராகணும்.. பெங்களூரிலிருந்து வந்து ரஜினி அண்ணன் சாந்தி யாகம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    கடலூர்: ரஜினி முதல்வராக யாகம் செய்யவில்லை... சத்தியநாராயணராவ் விளக்கம்...

    சிதம்பரம்: இன்னும் கட்சியை ஆரம்பிக்கவில்லை, அதற்குள்ளாக முதல்வராக வேண்டி, சிறப்பு யாகம் வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள் நடிகர் ரஜினிகாந்தின் விசுவாசிகள். ஆன்மீக அரசியலில் அடியேடுத்து வைத்துள்ள நடிகர் ரஜினிகாந்த், படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

    இந்தநிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு வருகை தந்துள்ள நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணா, நடராஜர் ஆலயத்தில் சாந்தி யாகம் நடத்தினார். யாகத்தில் கர்நாடக மாநில ரஜினி மக்கள் மன்ற தலைவரும், ரஜினிகாந்த் மாப்பிள்ளையுமான சந்திரகாந்த் கலந்து கொண்டார்.

    இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறுகையில், ரஜினி நீண்ட ஆயுள் பெறவும், 2021 தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக வேண்டும் என்பதற்காகவும் சாந்தி யாகம் நடத்தப்பட்டதாக கூறினர்.

    வடபழனி, கிண்டி, தாம்பரம் மக்களுக்கு இந்த அறிவிப்பு வரப்பிரசாதம்.. போக்குவரத்துதுறை முக்கியஅறிவிப்புவடபழனி, கிண்டி, தாம்பரம் மக்களுக்கு இந்த அறிவிப்பு வரப்பிரசாதம்.. போக்குவரத்துதுறை முக்கியஅறிவிப்பு

    அனல் பறக்கும் அரசியல் வசனம்

    அனல் பறக்கும் அரசியல் வசனம்

    தமிழ் திரைஉலகில் சூப்பர் ஸ்டராக ஜொலிக்கும் நடிகர் ரஜினி கடந்த, 1991ம் ஆண்டு அதிமுக மீது முதல் எதிர்ப்பை பதிவு செய்து அரசியலுக்கு அச்சாரமிட்டார். இதன் தொடர்ச்சியாக, கடந்த 1992ம் ஆண்டு அவர் நடித்த "அண்ணாமலை" திரைப்படத்தில் அனல் பறக்கும் அரசியல் வசனம் பேசினார்.

    அரசியல் கருத்து

    அரசியல் கருத்து

    தொடர்ந்து, திரைப்படங்களில் அரசியல் கருத்துக்களை பேசி வந்த ரஜினி, 1995-ம் ஆண்டு நேரடியாகவே பேச ஆரம்பித்தார். இதன் பிறகு, சினிமா பக்கம் தனது கவனத்தை செலுத்தினாலும், பல அரசியல் நெருக்கடிகளை கடந்து வந்தனர்.

    மோடிக்கு பாராட்டு

    மோடிக்கு பாராட்டு

    பின்னர், 2014ம் ஆண்டு மோடி, ஒரு சிறந்த தலைவர் என ரஜினி பாராட்டி மீண்டும் தனது அரசியல் கருத்தை பதிவு செய்தார். 2017 -ம் ஆண்டு போர் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்ற அவர், அதே ஆண்டு டிசம்பர் 31 - ல் அரசியல் பிரவேசம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 9ம் தேதி பாஜக தேர்தல் அறிக்கையை ரஜினி பாராட்டினார். இப்போது, சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என அறிவித்துள்ளார்.

    கவர்ந்திழுக்கும் தலைவர்

    கவர்ந்திழுக்கும் தலைவர்

    இதற்கிடையில், மத்தியில் தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது குறித்து பேசிய ரஜினிகாந்தி, நாடாளுமன்ற தேர்தலில் மோடி என்கிற தனி மனித தலைமைக்கு கிடைத்த வெற்றி. அவர் மக்களை கவர்ந்திழுக்கும் தலைவர். இந்தியாவில் நேருவுக்கு பிறகு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்கள் மக்களை கவர்ந்திழுப்பவர்களாக இருந்துள்ளனர். அந்த வகையில் தற்போது மோடி கிடைத்துள்ளார் என்றும் பேசினார்.

    சரியான தலைமை இல்லை

    சரியான தலைமை இல்லை

    தமிழகத்திற்கு சரியான தலைமை இல்லை என்று கூறியுள்ள ரஜினிகாந்த், தற்போது, திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அடுத்த வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வழியே பின்பற்றுவாரா அல்லது வேரேதும் திட்டமா என்பதை ரஜினிகாந்த் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

    English summary
    Shanthi Yagam was held at the Chidambaram Natarajar Temple actor Rajinikanth to be as the Chief Minister of Tamil Nadu in 2021
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X