• search
கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

காம வெறியனிடம் சிக்கி பலியான 16 வயசு சிறுவன்.. 33 வயது நபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை!

|
  ஓரினை சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை கொன்றவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை! -வீடியோ

  கடலூர்: 16 வயசு பையனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அவனுடன் ஓரினச்சேர்க்கை செய்ய முற்பட்டார் 33 வயசு இளைஞர்.. அதற்கு சிறுவன் மறுத்து தப்பி செல்ல முயல.. கட்டையால் அவனை அடித்து கொன்று.. அதன்பிறகு ஆடைகளை கலைந்து ஓரினச்சேர்க்கை செய்ய முயற்சித்த அந்த காம பிசாசுக்கு 7 வருஷம் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது கோர்ட்!

  கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகனுக்கு 16 வயசு. சிதம்பரம் செட்டியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். கடந்த 21.4.2014 அன்று இரவு சிறுவன் டியூசன் முடித்து விட்டு மாடியில் உள் தன் வீட்டிற்கு ஏறி வந்துள்ளார்.

  அப்போது, முதல் மாடியில் குடியிருந்த ஜவஹர்பாபு என்ற 33 வயது இளைஞர் சிறுவனிடம் பேச வேண்டும் என்று சொல்லி தன் வீட்டுக்குள் அழைத்து சென்றுள்ளார். பிறகு கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு, சிறுவனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அவனுடன் ஓரினச்சேர்க்கை செய்ய முயன்றுள்ளார். இதை பார்த்து பதறிபோன சிறுவன், பயந்துபோய், அங்கிருந்து தப்ப முயன்றிருக்கிறான்.

  ராசிபுரத்தில் குழந்தை விற்பனை குறித்த ஆடியோ வைரல்... விசாரணைக்கு சுகாதாரத்துறை உத்தரவு

  மூச்சு திணறி இறந்தான்

  மூச்சு திணறி இறந்தான்

  உடனே ஜவஹர்பாபு, அங்கிருந்த சவுக்கு கட்டையை எடுத்து சிறுவனின் தலையின் பின்புறம் ஓங்கி அடித்தார். இதில் சிறுவன் மயங்கி விழுந்தான். இந்த நிலையிலும், அவனது ஆடைகளை கலைத்து, ஓரினச்சேர்க்கை செய்ய முயற்சித்தான் சிறுவன். மயக்கம் ஓரளவு தெளிந்து சிறுவன் சத்தம் போட ஆரம்பித்தான். உடனே அவன் கழுத்தில் கையை வைத்து அழுத்தி, சவுக்கு கட்டையால் மடார் மடார் என தலையில் ஓங்கி அடித்தார் இளைஞர். இதில் பலத்த காயம் ஏற்பட்டும், கழுத்தை இளைஞன் நெறித்ததாலும், சிறுவன் மூச்சு திணறி இறந்துவிட்டான்.

  சடலம்

  சடலம்

  உடனே சிறுவன் இறந்ததும், சடலத்தை கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டார் இளைஞர். சிறுவனுக்கு தலையிலிருந்து ரத்தம் கொட்டியபடியே இருந்ததால், தலையில் பாலிதீன் கவர்களால் கட்டினார். கை கால்கள் மடித்து கட்டி ஒரு பெரிய பிளாஸ்டிக் சாக்குப்பையில் சிறுவனின் சடலத்தை நுழைத்து மூட்டை கட்டினார். அதிகாலையில் பிண மூட்டையை தூக்கி தன் மனைவி ஆரவள்ளி நடத்தி வந்த ஓட்டல் கடையின் ஒரு மூலையில் போட்டுவிட்டு, தப்பிவிட்டார்.

  அகிலா

  அகிலா

  இரண்டு நாள் கழித்து சிறுவனின் உறவினரான அகிலா என்பவர் சிறுவனின் செல்போனுக்கு போன் செய்துள்ளார். ஆனால், சிறுவனின் சிம் கார்டை பயன்படுத்தி ஜவஹர், அகிலாவிடம், 5 லட்சம் கொடுத்தால் சிறுவனை ஒப்படைப்பதாக சொல்லி, பேரம் பேசி உள்ளார். அதன்படி அவர்களும் சிறுவன் உயிருடன் கிடைத்தால் போதும் என்று நினைத்து பணத்துடன் சொன்ன இடத்துக்கு வருகிறோம் என்று சொல்லி உள்ளனர்.

  5 லட்சம் ரூபாய்

  5 லட்சம் ரூபாய்

  அகிலா தனது கணவர் மற்றும் சிலருடன் 5 லட்சம் பணத்துடன் சிதம்பரம் பைசல் மஹால் புறவழிச் சாலைக்கு வந்து கொண்டிருந்த போதுதான் சிறுவன் கொலை செய்யப்பட்டு விட்டதாக தகவல் கிடைத்தது. அதையடுத்து அவரிடம் பணத்தை கொடுக்காமல் திரும்பி சென்றுள்ளனர்.

  ஆயுள் தண்டனை

  ஆயுள் தண்டனை

  பின்னர் சிறுவனை கொலை செய்த ஜவஹர்பாபுவையும், உடந்தையாக இருந்த மனைவி ஆரவள்ளியையும் காவல் துறை கைது செய்தது. இவ்வழக்கு விசாரணை கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு வழக்கறிஞர் செல்வப்பிரியா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன் குற்றவாளி ஜவஹர்பாபுவுக்கு ஆயுள்தண்டனையுடன் 85,000 ரூபாய் அபராதாமும், அவரது மனைவி ஆரவள்ளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Cuddalore Court has ordered, Sentenced to life imprisonment to Auto Driver for boys Murder case
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more