கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஃபேஸ்புக்கில் ஆபாசமாக சித்தரிப்பு.. ராதிகா மரணத்துக்கு நீதி வேண்டும்.. எச்.ராஜா வேண்டுகோள்!

கடலூர் மாணவி ராதிகா மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என எச் ராஜா கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    பேஸ்புக்கில் ஆபாச மார்பிங் புகைப்படம்.... இருவர் தற்கொலை

    சென்னை: "மாணவி ராதிகாவை தற்கொலைக்கு தள்ளிய சமூக விரோதிகளை கைது செய்து காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று எச்.ராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

    இரு தினங்களாக கடலூர் காதல் ஜோடியின் தற்கொலை சம்பவம் தமிழகத்தை உலுக்கி வருகிறது. நெய்வேலி அருகே கல்லூரி மாணவி ராதிகா குறித்து ஃபேஸ்புக்கில் இளைஞர் ஒருவர் ஆபாச பதிவு போட்டார்.

    இதனால், இரு குடும்பங்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு, அந்த மனவேதனையில் ராதிகா தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    "யாரும் பேசக்கூடாது".. கொஞ்ச நேரத்தில் உடைத்தெறியப்பட்ட அதிமுகவின் உத்தரவு

    இளைஞர்

    இளைஞர்

    தற்கொலை செய்து கொண்ட ராதிகாவும், அவரது படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிட்டதாக கூறப்படும் இளைஞரும் வெவ்வேறு சமூகத்தினர் என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை காணப்பட்டு வருவதுடன், 100-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    டாக்டர் ராமதாஸ்

    டாக்டர் ராமதாஸ்

    இந்த சம்பவத்துக்கு டாக்டர் ராமதாஸ் உட்பட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தும், ராதிகா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி எச்.ராஜாவும் இதே வேண்டுகோளை ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.

    பாதுகாப்புக்கு கேடு

    அதில், "ஆபாசமாக சித்தரித்து முகநூலில் படம் வெளியிட்டு மாணவி ராதிகாவை தற்கொலைக்கு தள்ளிய சமூக விரோதிகளை கைது செய்து காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இம்மாதிரி சக்திகளை வெளியில் உலவ அனுமதிப்பது பெண்களின் பாதுகாப்பிற்கு கேடு" என்று பதிவிட்டுள்ளார்.

    நீதி தேவை

    நீதி தேவை

    சம்பந்தப்பட்ட இளைஞர் "சரக்கு மிடுக்கு" கட்சியை சேர்ந்தவர் என்பதால் எச்.ராஜா இப்படி சொல்லுகிறாரா, அல்லது விசாரணையில் நடுநிலைமை தேவை என்பதை சொல்லுகிறாரா என்று தெரியவில்லை... எதுவானாலும் ராதிகா மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!

    English summary
    Sivagangai BJP Candidate H Raja insists that "Justice for the death of Student Radhika"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X