கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்எல்சி பாய்லர் வெடி விபத்து - 6 பேர் உடல் கருகி மரணம் - 17 பேர் படுகாயம்

நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.

Google Oneindia Tamil News

கடலூர்: நெய்வேலியில் உள்ள என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் பல தொழிலாளர்கள் சிக்கி பலத்த காயமடைந்தனர். இவர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதத்தில் இது இரண்டாவது மிகப்பெரிய விபத்தாகும்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று காலை ஷிப்டில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் பல தொழிலாளர்கள் சிக்கி பலத்த காயமடைந்தனர்.

கர்நாடகாவில் பகீர்- 47 ஆடுகளுக்கு கொரோனாவா?- தனிமைப்படுத்தப்பட்டதால் கிராம மக்கள் அதிர்ச்சி கர்நாடகாவில் பகீர்- 47 ஆடுகளுக்கு கொரோனாவா?- தனிமைப்படுத்தப்பட்டதால் கிராம மக்கள் அதிர்ச்சி

6 பேர் உடல் கருகி பலி

6 பேர் உடல் கருகி பலி

வெடி விபத்தில் இவர்களில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால் அவர்களை தேடி வருகின்றனர். தீயை அணைக்கும் பணியில் தீ அணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

நெய்வேலி அனல் மின் நிலையம்

நெய்வேலி அனல் மின் நிலையம்

நெய்வேலி அனல் மின் நிலையம் 3,940 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இன்று விபத்து ஏற்பட்டிருக்கும் பகுதியில் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. என்.எல்.சி.யில், 15 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட மொத்தம் 27 ஆயிரம்பேர் பணியாற்றி வருகின்றனர்.

வெடி விபத்து பற்றி விசாரணை

வெடி விபத்து பற்றி விசாரணை

விபத்து பற்றி பேசிய அதிகாரிகள், வெடித்த பாய்லர் செயல்பாட்டில் இல்லை. அது எப்படி வெடித்தது என்று தெரியவில்லை. அது பற்றி நாங்கள் விசாரணை மேற்கொண்டுள்ளோம். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறோம். உயிரிழந்தவர்களில் சிலர் ஒப்பந்த தொழிலாளர்கள், சிலர் நிரந்தர தொழிலாளர்கள் என கூறினார்.

ஆறு பேரின் உயிரை குடித்த விபத்து

ஆறு பேரின் உயிரை குடித்த விபத்து

அனல்மின்நிலையத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கடந்த மே மாதம் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் படுகாயமடைந்தனர். இப்போது மீண்டும் பாய்லர் வெடித்து 6 பேரின் உயிரை பறித்துள்ளது. பலர் பலத்த தீ காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலியாகும் உயிர்கள்

பலியாகும் உயிர்கள்

கடந்த மே மாதத்தில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு பலர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து நெய்வேலியில் விபத்து ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 8 பேர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு மருந்து கம்பெனியில் இரு தினங்களுக்கு முன்பு எரிவாயு கசிந்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மீண்டும் நெய்வேலியில் விபத்து ஏற்பட்டு 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த தொடர் விபத்துகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

English summary
5 killed and 17 injury in Boiler blast NLC second thermal power plant
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X