கடலூரில் அரசு பள்ளி மாணவர்களிடையே சாதிச் சண்டை... வெளிநபர்களும் தாக்கியதால் மாணவர்கள் காயம்
கடலூர்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சாதி மோதலின்போது வெளி நபர்கள் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியதாக கூறி ஒரு தரப்பினர் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் வெள்ளக்கரை அருகே உள்ள பெரியகாட்டுப்பாளையத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இடையே முன்பகை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு மாணவர் சாதியை பற்றி தரக்குறைவாக கூறியதாக கூறி இரு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் T.புதுப்பாளையம், வண்டிகுப்பம் பகுதியை சேர்ந்த வெளிநபர்கள் உள்ளே புகுந்து அரசுப் பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் தாக்குதல் நடத்திய வெளி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு தரப்பு மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இரு சாதிகளை சேர்ந்த மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறாமல் இருக்க அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வெளி நபர்கள் தாக்கியதால் 8 மாணவர்கள் காயமடைந்த நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி செல்லும் மாணவர்கள் இடையே சாதி ரீதியிலான மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

நெல்லை மாவட்டம் பள்ளக்கால் பொதுக்குடியில் சாதி கயிறு கட்டுவது தொடர்பாக பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை அடிதடியாக மாறியதில் செல்வசூரியா என்ற மாணவர் தலையில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். மாணவர் உயிரிழப்புக்கு காரணமான 11 ஆம் வகுப்பு மாணவர்கள் மூவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
புள்ளிங்கோ ஸ்டைல் கட்டிங் வேண்டாம்... பள்ளி மாணவர்களுக்கு முடிவெட்டி அறிவுரை கூறிய தலைமை ஆசிரியர்