கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னதான் நடக்குது சிதம்பரம் தொகுதியில்.. நள்ளிரவு வரை இழுபறி.. திருமாவளவன் வெற்றி அறிவிப்பு எப்போது?

Google Oneindia Tamil News

Recommended Video

    Tamilnadu ByElection 2019 : தமிழக இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை

    கடலூர்: சிதம்பரம் (தனி) தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரான திருமாவளவன் வெற்றிமுகத்தில் இருந்தபோதும், அதுபற்றி நள்ளிரவு வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவில்லை.

    நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வாக்கு எண்ணிக்கை சுற்றுகளின்படி வெளியாகி வருகிறது. இதில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணியே முன்னிலை பெற்றுள்ளது.

    சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிட்டார். அந்த தொகுதியில் அதிமுக வேட்பாளராக சந்திர சேகர் களம்கண்டார்.

    செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்! செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்!

    திருமா பின்னடைவு

    திருமா பின்னடைவு

    இந்நிலையில் சிதம்பரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சந்திர சேகர் தொடக்கத்தில் முன்னிலை பெற்றார். ஆனால் சிறிது நேரத்திலேயே மிகக் குறைந்த வாக்கு எண்ணிக்கையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முன்னிலை வகித்தார், பின்னர் அவர் பின்னடைவை சந்தித்தார்.

    திருமா வெற்றி

    திருமா வெற்றி

    வாக்கு எண்ணிக்கை சுற்றுகளின் முடிவுகளில் விசிகவும் அதிமுகவும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தன. இந்நிலையில் நள்ளிரவு 12.30 மணியளவில் திருமாவளவன் 2825 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிமுகத்தில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் நள்ளிரவு 1.40 மணியை தாண்டிய பிறகும் கூட அவர் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.

    கோவையில் பாஜக வெற்றியில் மண் அள்ளி போட்ட மநீம.. ஒன்றே கால் லட்சம் வாக்குகள்.. சபாஷ் கமல்..! கோவையில் பாஜக வெற்றியில் மண் அள்ளி போட்ட மநீம.. ஒன்றே கால் லட்சம் வாக்குகள்.. சபாஷ் கமல்..!

    வெற்றி அறிவிப்பு?

    வெற்றி அறிவிப்பு?

    திமுகவுடன் கூட்டணி வைத்து பானை சின்னத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார் திருமாவளவன். தற்போது சிதம்பரம் தொகுதியில் அதிமுக வேட்பாளருடனான கடுமையான போட்டிக்கு பின் வெற்றிமுகத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் அப்படித்தான்.. தனித்துவமானவர்கள்.. அரசியல் பாடம் எடுத்த தமிழ்நாடு.. வியந்த வடஇந்தியர்கள்!அவர்கள் அப்படித்தான்.. தனித்துவமானவர்கள்.. அரசியல் பாடம் எடுத்த தமிழ்நாடு.. வியந்த வடஇந்தியர்கள்!

    10 ஆண்டுகள்

    10 ஆண்டுகள்

    அவரது வெற்றியை விசிக தொண்டர்கள் நள்ளிரவு என்றும் பாராமல் வெடிவெடித்தும் இனிப்புகளை பகிர்ந்தும் கொண்டாட தயாராக இருந்தனர். சமூக வலைத்தளங்களிலும், திருமாவை போற்றி, டாக்டர் திருமாவளவன் எம்.பி என்ற மீம்களுடன் நெட்டிசன்கள் தயாராக இருந்தனர். ஆனால், வெற்றி தொடர்பாக அறிவிப்பு வெளியாகாதது மர்மமாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.10 ஆண்டுகள் முன்பு இதே சிதம்பரம் தொகுதியிலிருந்து தொல்.திருமாவளவன் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Chidambaram: Set back for VCK leader Thirumavalavan, ADMK leads in the constituency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X