கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஆமா.. ஒவ்வொன்னாதானே பார்க்க முடியும்.. இதென்ன ரிமோட் கன்ட்ரோலா?".. கடலூரில் தெறிக்க விட்ட முதல்வர்

கடலூரில் வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஆய்வு செய்தார்

Google Oneindia Tamil News

கடலூர்: "இதென்ன ரிமோட் கன்ட்ரோல்ல பண்ற வேலையா? ஸ்விட்ச் பட்டனை அமுக்கி உடனே எல்லாம் போய் பார்க்கிறதுக்கு? ஒரு கம்பத்தை எடுத்து நிறுத்தி பாருங்க.. உழைச்சாதாங்க உழைப்பு அருமை தெரியும்" என்று செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு முதல்வர் நிறுத்தி நிதானமாக சொன்ன பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

கடலூரில் முதல்வர் நேற்று புயல் சேதாரங்கள் குறித்து நேரில் ஆய்வுமேற்கொண்டார்.. பிறகு செய்தியாளர்களிடமும் பேசினார்.

அந்த நேரத்தில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறித்து முதல்வர் பேசும்போது, செய்தியாளர் ஒருவர் குறுக்கிட்டு, கரண்ட் எப்போது தரப்படும் என்று கேள்வி எழுப்பினார்.

நெஞ்சை நொறுக்கும் வீடியோ.. சிறுமியின் சடலத்தை கடித்து சாப்பிட்ட தெருநாய்.. பகீர் கிளப்பும் உபி!நெஞ்சை நொறுக்கும் வீடியோ.. சிறுமியின் சடலத்தை கடித்து சாப்பிட்ட தெருநாய்.. பகீர் கிளப்பும் உபி!

மின்சாரம்

மின்சாரம்

அதற்கு முதல்வர் பதிலளிக்கும்போது,"மின்சாரத்தை நிறுத்தவில்லையானால், ஏதாவது ஒரு இடத்தில் சாய்ந்து, அங்கே யாராவது வழியில் நடந்து சென்றால், அவர்கள் அதில் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிடுவார்கள்.. அதனால்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எல்லா இடத்திலும், அதாவது புயல் பாதிக்கப்படுகின்ற இடத்தில் எல்லாம் மின்சாரம் நிறுத்தினோம்.

ஆய்வு

ஆய்வு

பிறகு ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்தபிறகுதான், அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரத்தை தர முடியும்.. இல்லாவிட்டால் எங்கே விட்டு போயுள்ளது, எங்கே கம்பம் சாய்ந்துள்ளது என்பது எப்படி நமக்கு தெரியும்.. நகர்புறமோ, கிராமப்புறமோ எல்லாமே ஆய்வு செய்து, கம்பம் சாயவில்லை, ஒயர் அறுந்து விழவில்லை என்பது உறுதி செய்தபிறகுதான் மின்சாரம் தரப்பட வேண்டும் என்று சொல்லி உள்ளோம்.

கம்பம்

கம்பம்

இல்லாவிட்டால் இவ்வளவு பெரிய புயல் அடிச்சிருக்கிறது.. எங்கே கம்பம் சாய்ந்திருக்கறது என்று யாருக்கும் தெரியாது.. அதனால் எடுத்தவுடனேயே மின்சாரத்தை தந்துடுவீங்களான்னு கேட்காதீங்க.. அதனால மக்கள் பாதிக்கப்படுவாங்க.. இதையெல்லாம் மக்கள் பாதுகாப்பாக இருக்கத்தான் அரசு எடுத்து வரும் நடவடிக்கையே தவிர, வேறொன்னுமில்லை.

உழைப்பு

உழைப்பு

ஆமா.. ஒவ்வொன்னாதானே பார்க்க முடியும்.. இதென்ன ரிமோட் கன்ட்ரோல்ல பண்ற வேலையா? ஸ்விட்ச் பட்டனை அமுக்கி உடனே எல்லாம் போய் பார்க்கிறதுக்கு? ஒரு கம்பத்தை எடுத்து நிறுத்தி பாருங்க.. நீங்க போய் பாருங்க, ஒரு கம்பத்தை நிறுத்த எவ்ளோ நேரம் ஆகும்னு? உழைச்சா தாங்க அந்த உழைப்பு தெரியும்.. ஒரு மின்கம்பத்தை இழுத்து நிறுத்தி, அதுல ஒயர் எடுத்து இவ்வளவும் நேரமாகும்.

ஷாக் அடிச்சிடும்

ஷாக் அடிச்சிடும்

ரெண்டாவது எர்த்.. ஏற்கனவே மரம் சாய்ந்து இருக்கு.. மரத்துமேல அந்த கிளையில் ஒயர் பட்டால், ஷாக் அடிச்சிடும்... அதனால நம்ம அரசு ஊழியர்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், இரவு பகல் பாராமல், இந்த புயல் நேரத்தில் உதவிட்டு இருக்காங்க.. அவங்களை பாராட்டுங்க.. அவங்க ஒவ்வொருத்தருடைய உயிர் முக்கியம்" என்றார்.

English summary
CM Edapadi Palanisamys Cuddalore Visit
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X