கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குரூப் 4 முறைகேடு.. மேலும் ஒரு இடைத்தரகரை கைது செய்தது சிபிசிஐடி போலீஸ்

Google Oneindia Tamil News

கடலூர்: குரூப் 4 தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய மேலும் ஒரு இடைத்தரகரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இடைத்தரகர்கள், அதிகாரிகள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Cuddalore CBCID police arrested Mediator in Group 4 exam scandal

இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளார். ராமேஸ்வரம், கீழக்கரை வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 10 பேர் ஏற்கெனவே சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அது போல் மற்ற பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் கைது செய்யப்பட்டார்.

ஏன் முதல் கல்யாண முறிவுக்கே பெரியார்தான் காரணம்னு உளறுங்களேன்.. முட்டாள் நாத்திகம்.. எஸ் வி சேகர்ஏன் முதல் கல்யாண முறிவுக்கே பெரியார்தான் காரணம்னு உளறுங்களேன்.. முட்டாள் நாத்திகம்.. எஸ் வி சேகர்

இவர் குரூப் 4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்டதாக தெரிகிறது. அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முறைகேடு விவகாரத்தில் ஏற்கெனவே 2 வட்டாட்சியர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.

English summary
Cuddalore CBCID police arrested Mediator in Group 4 exam scandal. He is from Panruti.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X