கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

12 வயசு சிறுமியிடம் 63 வயது தாத்தா சேட்டை... ஆஸ்பத்திரிக்கே போய் தீர்ப்பை அறிவித்த நீதிபதி!

கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கே சென்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தீர்ப்பை வாசிக்க மருத்துவமனைக்கே சென்ற நீதிபதி- வீடியோ

    கடலூர்: தீர்ப்பு சொல்ல ஆஸ்பத்திரிக்கே வந்துவிட்டார் கடலூர் மாவட்ட ஜட்ஜ் டி.லிங்கேஸ்வரன்!!

    பென்னாடத்தை சேர்ந்தவர் சங்கரநாராயணன். 63 வயசானாலும் அதற்கேற்ற குணம் இல்லாத சங்கரநாராயணன், 12 வயசு சிறுமி கிட்ட வேலையை காட்டியிருக்கார்.

    போன வருடம் தன் பகுதியிலேயே வசிக்கும் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்க போய், இந்த விவகாரம் பெரிதாகி கோர்ட்டில் கேஸ் நடந்துகொண்டிருந்தது.

    கூண்டில் நிறுத்தினர்

    கூண்டில் நிறுத்தினர்

    நீதிபதி டி.லிங்கேஸ்வரன்தான் இந்த வழக்கை விசாரித்து வந்தார். பல கட்ட விசாரணை நடந்து முடிந்து தீர்ப்பு சொல்ல வேண்டிய நேரமும் வந்தது. கடந்த வியாழக்கிழமை தீர்ப்பு என தேதி கூறப்பட்டது. அதற்காக சங்கரநாராயணனை அழைத்து வந்து கூண்டில் நிறுத்தினார்கள். நீதிபதியும் தீர்ப்பை வாசிக்க தொடங்கினார்.

    மயங்கி விழுந்தார்

    மயங்கி விழுந்தார்

    அப்போது சங்கரநாராயணன்தான் குற்றவாளி என்று தீர்ப்பில் நீதிபதி சொல்லி கொண்டிருந்தார். இதை கேட்டதும் சங்கரநாராயணன் கூண்டிலேயே மயங்கி விழுந்தார். இதனால் ஜட்ஜ் உட்பட எல்லோருமே அங்கு பதட்டமடைந்தார்கள்.

    பலத்த பாதுகாப்பு

    பலத்த பாதுகாப்பு

    உடனடியாக 108 ஆம்புலன்ஸில் சங்கரநாராயணனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகும்படி ஜட்ஜ் சொன்னார். இதையடுத்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட சங்கர நாராயணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.கூடவே பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

    ஆஸ்பத்திரியில் நீதிபதி

    ஆஸ்பத்திரியில் நீதிபதி

    நேத்து சங்கர நாராயணன் திரும்பவும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். ஆனால் இன்னும் உடம்பு சரியாகவில்லை. மருத்துவமனையில்தான் சிகிச்சை போய் கொண்டு இருக்கிறது. அதனால் நீதிபதி நேற்று சாயங்காலம் நேராக ஆஸ்பத்திரிக்கே வந்துவிட்டார்.

    தீர்ப்பை வாசித்தார்

    தீர்ப்பை வாசித்தார்

    படுக்கையில் படுத்து கொண்டிருந்த சங்கரநாராயணா அருகில் நின்ற நீதிபதி, "சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், சங்கரநாராயணனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை" என்று தீர்ப்பை வாசித்து முடித்தார். இத்துடன், சங்கரநாராயணன் கொலை மிரட்டல் விடுத்ததற்காக மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படுவதாக தீர்ப்பை வாசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். தீர்ப்பை வழங்க ஆஸ்பத்திரிக்கே நீதிபதி நேரில் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Cuddalore judge T. Lingeswsaran visited accused in hospital and pronounced
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X