• search
கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"36 வயதினிலே".. நிர்வாண நிலையில் ஒரு கொடூரம்.. சத்யாவை மாடிக்கு அழைத்து சென்று.. அலறிய கடலூர்

Google Oneindia Tamil News

கடலூர்: தனக்கு 36 வயசு ஆகிறது, கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதே சத்யாவுக்கு மறந்து போய்விட்டது போலும்.. 16 வயசு பெண்ணாக தன்னை நினைத்து கொண்டு செய்த காரியம், கள்ளக்காதல் ஆரம்பித்து கொலை வரை நடந்து முடிந்துவிட்டது!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த புவனகிரி கடை வீதியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் உள்ளது.. இந்த நிறுவனத்தின் மாடிப்படிக்கட்டில் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.

அதனால் போலீசார் அந்த இடத்துக்கு சென்று பார்த்தனர்.. அந்த பெண்ணின் உடல் நிர்வாணமாக கிடந்தது.. உடல் அழுகி போய் கிடந்தது.. பின்னர், சடலத்தை மீட்டு விசாரணையை ஆரம்பித்தனர்.

சென்னையில் ஜனவரியில் 100 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கனமழை.. வெதர்மேன் தகவல்!சென்னையில் ஜனவரியில் 100 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கனமழை.. வெதர்மேன் தகவல்!

 சத்யா

சத்யா

அப்போதுதான், சம்பந்தப்பட்ட பெண் புதுச்சேரி மாநிலம் திருபுவனையை சேர்ந்த சத்யா என்பது தெரியவந்தது.. சத்யாவுக்கு 36 வயசாகிறது.. கணவன் பெயர் ராஜேந்திரன்.. வெளிநாட்டில் வேலை பார்க்கிறாராம்.. 2 குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற தகவலும் கிடைத்தது. ஆனால், சத்யாவை யார் இப்படி நிர்வாண நிலையில் கொன்றார்கள் என்ற சந்தேகம் வலுத்தது.

 சிசிடிவி கேமிரா

சிசிடிவி கேமிரா

அதனால், அந்த நிதி நிறுவனத்தில் இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.. அதில் கடந்த 29-ந்தேதி இரவு 7 மணிக்கு சத்யா அந்த மாடியில் செல்வது பதிவாகி இருந்தது.. சத்யாவுடன் இன்னொருவரும் சென்றார்.. அவர் பெயர் முரசொலி மாறன்.. 29 வயதாகிறதாம்.. புவனகிரியில் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்க்கிறார்.. அவர்தான் சத்யவை மாடிக்கு அழைத்து செல்வது பதிவாகி இருந்தது.. பிறகு ராத்திரி 10 மணி இருக்கும்.. முரசொலிமாறன் மட்டும் தனியாக கீழே இறங்கி வந்ததும் தெரிந்தது.

 கொலை

கொலை

இதனால் அவர்தான் சத்யாவை கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டனர்.. அதனால் தேட ஆரம்பிப்பதற்குள், முரசொலி மாறன் எஸ்கேப் ஆகிவிட்டார்... இதனால் வழக்கை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.. பிறகு, முரசொலி மாறனை பிடிக்க ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது... பல்வேறு தேடுதல் வேட்டைக்கு பிறகு முரசொலி மாறன் அவினாசியில் பதுங்கி இருப்பது தெரியவரவும், அங்கு சென்று அவரை கைது செய்ய போலீசார் விரைந்தனர்..

 முரசொலி மாறன்

முரசொலி மாறன்

ஆனால், போலீசார் வருகிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட முரசொலி மாறனோ, திடீரென தற்கொலைக்கு முயன்றார்.. அதாவது தன்னுடைய காதில் பால்டாயில் விஷத்தை ஊற்றி கொண்டார்.. அதை பார்த்த போலீசார் அவரை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்... முதலுதவியும் தரப்பட்டது... இதையடுத்து முரசொலி மாறனிடம் விசாரணை நடந்தது.. அப்போது அவர் வாக்குமூலத்தில் சொன்னதாவது:

 வாக்குமூலம்

வாக்குமூலம்

நானும், சத்யாவும் திருபுவனை பகுதியில் உள்ள ஒரு நூல் கம்பெனியில் வேலைபார்த்தோம்... நட்பு உருவானது.. அது காதலானது.. அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தோம்.. எனக்கு புவனகிரியில் வேலை கிடைத்து வந்துவிட்டேன்.. ஆனாலும் சத்யாவுடன் பழக்கம் தொடர்ந்தது.. சம்பவத்தன்று சத்யா, என்னை பார்க்க ஆபீசுக்கு வந்தார்.. அவரை நான் மாடிக்கு அழைத்து சென்றேன்... அங்கு ஜாலியாக இருந்தோம்.

கொடூரம்

கொடூரம்

பிறகு, தன்னை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சத்யா தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்.. நான் மறுத்துவிட்டேன்.. உடனே தகராறு செய்தார்.. அதனால், கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன்.. அங்கிருந்த படிக்கட்டில் சடலத்தை கொண்டு போய் போட்டுவிட்டு தப்பிவிட்டேன்" என்றார். இப்போது முரசொலி மாறனிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.. குடும்பத்துக்காக உழைக்கும் கணவர் எங்கோ வெளியூரில் இருக்க, அவரையும் மறந்து, 2 குழந்தைகளையும் மறந்த சத்யாவின் வாழ்க்கை கொடூரமாக முடிந்துவிட்டது!

English summary
Cuddalore woman murder due to illegal relationship
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X