உணவு நல்லா இருக்கா.. உதவி தேவையா.. கடலூர் புயல் பாதுகாப்பு மையத்தில் கனிவாக கேட்ட ககன்தீப் சிங் பேடி
கடலூர்: கடலூரில் நிவர் புயல் முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. புயல் பாதுகாப்பு மையத்தில் கடலூர் சிறப்பு அதிகாரி ஆய்வு செய்தனர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் புதன்கிழமை கரையைக் கடக்க உள்ள நிலையில் தமிழக அரசின் பரிந்துரையின் படி கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் எடுக்கப்பட்டு வருகிறது.

இன்று கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர் ககன்தீப் சிங் பேடி, கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை, சிதம்பரம், ராசாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களை ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி உடனிருந்தார்.
ராசாபேட்டை, சாமியார் பேட்டை ஆகிய மீனவ கிராமத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் 120 குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியை பார்வைிட்டு, உணவின் தரத்தை பரிசோதித்தார், மேலும் அவர்களிடம் ஏதாவது உதவி தேவையா என்று கேட்டு விசாரித்தார்.