கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடலூரில் முகாமிட்டுள்ள பேரிடர் மீட்பு குழுவினர்... விருந்து கொடுத்து உபசரித்த கலெக்டர்

கடலூர் மாவட்டத்தில் நிவர் புயல் மீட்பு பணிக்காக முகாமிட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு வள்ளி விளாஸ் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் நன்றி தெரிவித்து விருந்து உபசரித்தார்

Google Oneindia Tamil News

கடலூர்: நிவர் புயல் பாதிப்பினால்அதிகம் பாதிக்கப்பட்டது கடலூர் மாவட்டம்தான். உயிரை பணயம் வைத்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், அரசுத்துறை அதிகாரிகளும் புயல் மீட்புபணியில் ஈடுபட்டனர். திருமண மண்டபத்தில் தங்கியுள்ள பேரிடர் மீட்புக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்து உபசரித்தார் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திர சேகர் சகாமுரி

கரையை கடந்த நிவர் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது கடலூர்தான். தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டதால் உயிர்சேதம் ஏற்படாமல் தப்பினர். பயிர்களும், வாழை, கரும்புகளும் சேதமடைந்தன. புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் பழனிச்சாமி நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார்.

நிவர் புயல் நிவாரணம் : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் முதல்வர் அறிவிப்புநிவர் புயல் நிவாரணம் : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் முதல்வர் அறிவிப்பு

Disaster relief team camped in Cuddalore ... Collector giving a treat

இந்த நிலையில் புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரணப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி உத்தரவிட்டுள்ளார். இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வெள்ளம் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை வடியவைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Disaster relief team camped in Cuddalore ... Collector giving a treat

வெள்ள சேத பகுதிகளை துரிதமாக கணக்கெடுத்து நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது. வேஷ்டி, சேலை வழங்கவும், அரிசி பருப்பு வழங்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நிவர் புயல் மீட்பு பணிக்காக முகாமிட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு வள்ளி விளாஸ் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் நன்றி தெரிவித்து விருந்து கொடுத்து உபசரித்தார்.

மாவட்ட ஆட்சியர் தனது கையில் குருமா வாளியை எடுத்துக்கொண்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நேரில் சென்று பரிமாறியதோடு எல்லோரும் நன்றாக கேட்டு வாங்கி சாப்பிடுங்கள் என்று பாசத்தோடு தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் கவனிப்பில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அதிகாரிகளும் நெகிழ்ந்து போயினர்.

English summary
Cuddalore district was the worst hit by the cyclone. At the risk of their lives, the National Disaster Rescue Team and government officials were involved in the rescue operation. Cuddalore District Collector Chandra Sekar Sakamuri hosted a biryani dinner for the disaster relief team staying at the wedding hall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X