பனை ஓலையா.. பானை ஓலையா.. டங் ஸ்லிப் ஆன ஸ்டாலின்.. நெட்டிசன்கள் கலாய்!
சிதம்பரம் தொகுதி பிரச்சாரத்தில் முக ஸ்டாலின் திருமாவுக்காக பிரச்சாரம் செய்தார்.
சென்னை: பார்த்து பார்த்துதான் படிக்கிறார்.. ஆனாலும் டங்க் ஸ்லிப் ஆகி ஏதாவது ஏடாகூடமாகி விடுகிறது திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு!
தமிழக பிரச்சாரங்கள் இறுதி கட்டத்தை எட்டி வருகின்றன. இதில் பல இடங்களில், பல கட்சி சார்பாக நடந்த பிரச்சாரங்களில் உளறல்கள் நிறைய நடந்தது.
கட்சி பெயர், வேட்பாளர் பெயர், சின்னம் பெயர் என எல்லாவற்றையுமே மாற்றி மாற்றி சொல்லி சம்பவங்கள் நடந்தன! இந்த லிஸ்ட்டில் திமுக தலைவர் ஸ்டாலினும் சேர்ந்துள்ளார்.
சமீபத்தில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது, கையில் வழக்கம்போல் எழுதி வைத்த பேப்பர் இருந்தது. அதை பார்த்து பார்த்துதான் படித்தார்.
அப்போது, "மண்பானைக்கு வரலாற்றில் ஒரு தனிச்சிறப்பு உண்டு. "பானை" ஓலைகளில் எழுதுவது என்பது "கற்களில்" எளிய மக்களுக்கு எட்டாத செயல். அதனால்தான் எளிய மக்கள் பானைகளில் எழுதி வைத்தார்கள்" என்றார்.
அதாவது "பனை ஓலை" என்பது பானை ஓலையாகிவிட்டது, கற்காலங்களில் என்பது "கற்களில்" என்று ஆகிவிட்டது. இவை வாய் தவறிய சொல்லிவிட்ட வார்த்தைகள் என்றாலும், இதனை வீடியோவாக எடுத்து நெட்டிசன்களும் வைரலாக்கி வருகின்றனர்.
இந்தியாவிலேயே இலவச மின்சாரம் கொடுக்கும் அரசு நாங்கதான் ... மார்தட்டும் முதல்வர் பழனிச்சாமி