• search
கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நடு ரோட்டிலேயே இழுத்து கட்டிப் பிடித்து.. "டார்ச்சர்".. தம்பி மனைவிக்கு நேர்ந்த கொடூரம்.. !

|

கடலூர்: தம்பி மனைவியை நடுரோட்டிலேயே கட்டிப்பிடித்தும்.. அங்கங்களை தொட்டு சித்ரவதை செய்தும், சரமாரியாக அடித்தும் இருக்கிறார் ஒரு குடிகார பாவி.. "நோயாளி புருஷனோட ஏன் வாழுறே, என்கூட வந்துடு" என்று தம்பி மனைவிக்கு தினமும் செக்ஸ் டார்ச்சர் தந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இது சம்பந்தமான சிசிடிவி காட்சியும் வெளியாகி பகீரை கிளப்பி வருகிறது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த நாவலூர் பகுதியை சேர்ந்தவர் முருகன்.. 32 வயதாகிறது.. மனைவி பெயர் காவேரி.. அவருக்கு 28 வயதாகிறது.. 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருகன் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டார்.. இதனால் கை கால் செயலிழந்து, வீட்டிலேயே முடங்கி உள்ளார்.. வேலைக்கும் போக முடியவில்லை.. அதனால் வருமானத்துக்கும் வழியில்லை.

 மாத்திரைகள்

மாத்திரைகள்

சாப்பாட்டுக்கும் சிரமம் ஏற்பட்டது.. இதைத்தவிர முருகனுக்கு மருந்து, மாத்திரைகள் செலவும் உள்ளது.. இதையெல்லாம் சமாளிக்க வழி தெரியாமல் விழி பிதுங்கினார் காவேரி.. இறுதியில், சிக்கன் கடை ஒன்றை மிகுந்த சிரமத்துக்கு இடையே தனி ஆளாகவே நடத்த ஆரம்பித்தார்.

காவேரி

காவேரி

இந்த நிலையில், முருகனின் அண்ணன் சுப்பிரமணியன் அடிக்கடி சிக்கன் கடைக்கு வந்து காவேரியிடம் தகராறு செய்துள்ளார்.. தினமும் தண்ணி அடித்துவிட்டு, போதையில் வந்து, அசிங்க அசிங்கமாக காவேரியை பேசுவார்.. கொஞ்ச நேரத்தில் ஆபாசமாகவும் பேசுவார்... ஒருகட்டத்தில் பாலியல் தொல்லையும் தர ஆரம்பித்து விடுவார்.

 படுத்த படுக்கை

படுத்த படுக்கை

''நீன்னா எனக்கு உயிர்.. என் தம்பிதான் படுத்த படுக்கையாகிட்டானே.. அவன் ஒரு நோயாளி.. அதனால் என்னுடன் தான் நீ ஜாலியா இருக்கணும்" என்று செக்ஸ் டார்ச்சர் தந்து கொண்டே இருந்திருக்கிறார்.. ஆனால் இதற்கெல்லாம் காவிரி மசியவில்லை.. ஒவ்வொரு முறை சுப்பிரமணி தொல்லை தந்தபோதும், கடையை விட்டு விரட்டி அனுப்பிவிடுவார். இதனால் அடுத்த கட்ட டார்ச்சருக்கு சென்றார் சுப்பிரமணி.. படுக்கையில் முடங்கி கிடக்கும் தம்பியை அடித்து சித்ரவதை செய்ய போவதாகவும், தன்னுடன் நெருக்கமாக இல்லாவிட்டால், அவரை கொன்றே விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது.

 சுப்பிரமணி

சுப்பிரமணி

இப்படி தினம் தினம் சுப்பிரமணியனின் தொல்லை தாங்காமல், காவிரி, கடந்த சில நாட்களுக்கு முன்பு விருத்தாச்சலம் மகளிர் ஸ்டேஷனில் புகார் தந்தார்.. ஆனால், சுப்ரமணியன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.. வெறுமனே கூப்பிட்டு மிரட்டி அனுப்பிவிட்டார்களாம். கடந்த தீபாவளி அன்றும் குடிபோதையில் தள்ளாடி கொண்டே வந்தார் சுப்ரமணியன்.. வழக்கம்போல காவேரி வீட்டுக்கு சென்று டார்ச்சர் தர ஆரம்பித்தார்.

 செக்ஸ் டார்ச்சர்

செக்ஸ் டார்ச்சர்

ஆபாச வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தார்.. காவேரியயை இழுத்து பிடித்து ரோட்டுக்கு வந்து, கட்டிப்பிடிக்க முயன்றார்.. அவரது அங்கங்களை தொட்டு அடித்து சித்ரவதை செய்துள்ளார்... நடுரோட்டில் ஒரு பெண்ணை இப்படி மானபங்கப்படுத்த முயல்வதை, கண்டு அந்த பகுதி மக்கள் நடுநடுங்கினர்.. ஒருசிலர் வெறிபிடித்த சுப்பிரமணியனை தடுக்க முடியாமல் நின்றனர்.. மேலும் சிலர் இதை வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டனர்.

வீடியோ

வீடியோ

அதன்பிறகுதான் இப்படி ஒரு செய்தியே வெளியே தெரிய ஆரம்பித்தது.. மீடியாவின் கவனத்துக்கும் வந்தது.. இதுகுறித்து காவிரி ஒரு டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், "எனக்கு உடம்பெல்லாம் முடியல.. அப்படி அடிச்சு கொடுமைப்படுத்திட்டார்.. உடம்பு முடியாதவன்கூட ஏன் குடும்பம் நடத்துறே," ன்னு கேட்டு கேட்டு அடிக்கிறார்.. அவர்கூட வாழ சொல்றார்.. எனக்கும் என் குடும்பத்துக்கும் உயிர் பாதுகாப்பு வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார். தம்பி மனைவி காவேரியை நடுரோட்டில் கட்டிப்பிடித்து, இழுத்து போட்டு அடித்து, டார்ச்சர் தந்த அந்த வீடியோ இன்னமும் சோஷியல் மீடியாவில் வைரலாகி பலருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது .

 
 
 
English summary
Drunkard Man giving sex torture to his sister in law near Cuddalore
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X