கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடலூரில் முறிந்த வாழை மரங்கள்.. கனிவுடன் விசாரித்த முதல்வர்.. நேரில் வந்ததால் மக்கள் நெகிழ்ச்சி

Google Oneindia Tamil News

கடலூர்: கடலூரில் முறிந்து கிடந்த வாழை மரங்களை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளிடம் கனிவுடன் விசாரித்து ஆறுதல் கூறினார்.

நிவர் புயல் நேற்று இரவு புதுவை அருகே கரையை கடந்தது. இதனால் கடலூர், புதுவை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதனால் மரங்கள் முறிந்து விழுந்து கடலூரே சின்னாபின்னமாக இருக்கிறது.

இந்த நிலையில் புயல் கரையை முழுவதுமாக கடந்தவுடன் சில மணி நேரங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடலூருக்கு சென்றார். அவருடன் அமைச்சர் எம்சி சம்பத்துடன் சென்றார்.

ஹீரோ எடப்பாடியார்.. ஹீரோ எடப்பாடியார்.. "வாங்க.. உட்காருங்க".. எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்து.. கலக்கிய முதல்வர்

வாழை மரங்கள்

வாழை மரங்கள்

ரெட்டிசாவடி - கீழ் குமாரமங்கலம் சாலையில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் இன்னும் சில நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தற்போது முறிந்து விழுந்துவிட்டது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முறிந்து கிடந்த வாழை மரங்களை முதல்வர் பார்வையிட்டார்.

ஏக்கர்

ஏக்கர்

அப்போது சேற்றில் இறங்கிய முதல்வர் வாழையை பயிரிட்ட விவசாயியை அழைத்து ஆறுதல் கூறினார். மேலும் விவசாயத் துறை செயலாளர் ககன்தீப் பேடியிடம் என்னென்ன பயிர்கள் சேதமடைந்தது என்ற விவரத்தையும் எத்தனை ஏக்கர் என்ற தகவலையும் கேட்டறிந்தார்.

வேதனை

வேதனை

தைத் திங்களுக்கு விற்பனை செய்யப்படும் பன்னீர் கரும்புகளும் முற்றிலும் சேதமடைந்தது. அது போல் நிலக்கடலை, நெல் ஆகியவை குறித்தும் விசாரித்தார். வாழை சேதத்தை பார்வையிட்ட போது தானும் விவசாயி என்பதால் அந்த சேதத்தை பார்த்து முதல்வர வேதனை அடைந்தார்.

மூதாட்டி

புயல் பாதிப்பை பார்வையிட புயல் கரையை கடந்த சில மணி நேரங்களில் தங்கள் ஊருக்கு முதல்வர் நேரில் வந்ததால் மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். கடலூர் - தேவனாம்பட்டினம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நிவர் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மூதாட்டியிடம் நலம் விசாரித்து, அவரது குறைகளைக் கேட்டறிந்தார்.

English summary
CM Edappadi Palanisamy review in Cuddalore which was affected by Nivar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X