கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாற்று ஜாதி பெண்ணுடன் மகன் திருமணம்.. ஆத்திரமடைந்த தந்தை.. கோடாரியால் தாக்கும் பகீர் வீடியோ

Google Oneindia Tamil News

கடலூர்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி அருகே மாற்று ஜாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட மகனையும், மருமகளையும் வீட்டை விட்டு வெளியேற முதியவர் கோடாரியை கொண்டு தாக்கும் வீடியோ காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன.

Recommended Video

    மாற்று ஜாதி பெண்ணுடன் மகன் திருமணம்.. ஆத்திரமடைந்த தந்தை.. கோடாரியால் தாக்கும் பகீர் வீடியோ

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி அடுத்த ஆண்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது இளைய மகன் மணிமாறன். இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு மாற்று ஜாதியை சேர்ந்த சத்யாவுடன் காதல் ஏற்பட்டது.

    ஆர்யன் கான் வழக்கில் பேரம்.. '8 மணி நேரம்' முக்கிய சாட்சி அளித்த பரபரப்பு வாக்குமூலம் ஆர்யன் கான் வழக்கில் பேரம்.. '8 மணி நேரம்' முக்கிய சாட்சி அளித்த பரபரப்பு வாக்குமூலம்

    இதையடுத்து தனது வீட்டாரின் எதிர்ப்பை மீறி அந்த பெண்ணை மணிமாறன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    ஜெயராமன்

    ஜெயராமன்

    திருமணம் ஆன நாள் முதலே மணிமாறனின் தந்தை ஜெயராமன், மருமகள் சத்யாவை கண்டாலே ஆவதில்லை. அவரையும் மகனையும் ஜெயராமன் ஆபாசமாக பேசிவருவது , தகராறு செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தார். அவ்வப்போது அக்கம்பக்கத்தினர் வந்து சண்டையை விலக்கி விடுவது வாடிக்கையாக இருந்தது.

    மணிமாறன் ஊரில் இல்லாத நேரம்

    மணிமாறன் ஊரில் இல்லாத நேரம்

    இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி மணிமாறன் ஊரில் இல்லாத நேரத்தில் சத்யாவிடம் ஜெயராமன் தகராறு செய்துள்ளார். இதையடுத்து வெளியூரிலிருந்து வீட்டுக்கு வந்த மணிமாறனிடம் நடந்தவற்றை கூறி சத்யா அழுதுள்ளார். இதையடுத்து மணிமாறன் தந்தையிடம் போய் தனது மனைவியிடம் தகராறு செய்தது ஏன் என நியாயம் கேட்டுள்ளார்.

    போர்டு

    போர்டு

    இதனால் மேலும் ஆத்திரமடைந்த ஜெயராமன், அவர்கள் இருவரையும் வீட்டை விட்டு விரட்டியதும் கோடாரியை கொண்டு வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது மணிமாறன் கதவை மூடியதால் ஜெயராமனின் கோடாரி வெட்டு கதவில் விழுந்தது. இதில் மேலும் ஆத்திரமடைந்த ஜெயராமன் ஒரு டேபிள் மீது ஏறி ஸ்விட்ச் போர்டில் ஓங்கி வெட்ட அந்த போர்டு உடைந்துவிட்டது.

    மின்சார கம்பி

    மின்சார கம்பி

    எனினும் கோடாரியின் முனை மின்சார கம்பியில் படாததால் ஜெயராமன் உயிர் தப்பினார். இவ்வாறு வீட்டிலிருந்த ஒவ்வொரு பொருளையும் உடைத்துள்ளார். இதையடுத்து மணிமாறனின் சகோதரரும் ஜெயராமனுடன் சேர்ந்து கொண்டு சத்யாவிடம் தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் அக்கம்பக்கத்தினர் செல்போனில் வீடியோவாக எடுத்ததை பார்த்ததும் ஜெயராமன் அங்கிருந்து தப்பினார்.

    மாவட்ட எஸ்பி

    மாவட்ட எஸ்பி

    இதையடுத்து வீட்டில் நடந்தவற்றை புகாராக எழுதி வீடியோ ஆதாரத்துடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சத்யா புகார் அளித்தார். அந்த புகாரில் தன்னை ஜாதி பெயரை சொல்லி கணவர் வீட்டார் அவதூறு பேசுவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட எஸ்பி உறுதியளித்துள்ளதாக தம்பதி தெரிவித்தனர்.

    English summary
    Elder man attacks his daughter in law for son's inter caste marriage. He attacks her using axe.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X