கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்த சிவரஞ்சனி.. அடுத்த நிமிடம் நடந்த ஷாக்.. அதிர வைத்த ராஜீவ்!

பச்சிளம் குழந்தையை பெற்ற தகப்பன் கொன்றுள்ளார்

Google Oneindia Tamil News

சிதம்பரம்: "குழந்தை ஏன் ஜாடையில் இல்லை" என்று கேட்டார் சிவரஞ்சனியிடம் கேட்டார் கணவர்.. அதுக்காக இப்படி செய்துவிடுவார் என்று யாருமே நினைச்சுகூட பார்க்கவில்லை...!

சிதம்பரம் அருகே சாக்காங்குடி என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வரும் தம்பதி ராஜீவ் - சிவரஞ்சனி தம்பதியினர்..

இவர்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு சிதம்பரம் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.. சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில்தான் குழந்தை பிறந்தது..

கொடூரம்

கொடூரம்

இந்த தகவல் கேள்விப்பட்டதும், ராஜீவ் ஆசை ஆசையாக குழந்தையை பார்க்க ஓடினார்.. ஆனால், அந்த குழந்தை தன்னுடைய முக சாயலில் இல்லை என்பதை பார்த்து அதிர்ந்து போயுள்ளார்.. இதை பற்றி மனைவியிடமும் கேட்டார்.. குழந்தை ஏன் என்னுடைய ஜாடையில் இல்லை என்று கேட்கவும், சிவரஞ்சனி அதற்கு மேல் அதிர்ந்து போய்விட்டார்.

சந்தேகம்

சந்தேகம்

இதையடுத்து, டிஸ்சார்ஜ் ஆகி சிவரஞ்சனி அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்.. ஆனால், ராஜீவ் கோபத்தை எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் அமைதியாக வீட்டுக்கு வந்து போய் கொண்டு சகஜமாக இருந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்தார் சிவரஞ்சனி.. அப்போது குழந்தையை கொஞ்ச நேரம் தான் வைத்திருப்பதாக சொல்லி கேட்டு வாங்கி கொண்டார்..

கொலை

கொலை

சிவரஞ்சனியும் தூங்க போய்விட்டார்.. அப்போது லைட்டை ஆப் செய்த ராஜீவ், குழந்தையின் தொப்புள் கொடியை பிடித்து இழுத்து, தரையில் தூக்கி அடித்துள்ளார்.. அத்துடன் அந்த பிஞ்சுவின் கழுத்தையும் நெரித்து கொன்றே விட்டார்.. கொஞ்ச நேம் கழித்து, கண்விழித்த சிவரஞ்சனி, குழந்தை பேச்சுமூச்சில்லாமல் இருப்பதை கண்டு அதிர்ந்து போய், அலறினார்..

குழந்தை

குழந்தை

அக்கம்பக்கத்தினரை அழைத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினார்.. அப்போது குழந்தையை செக் செய்து பார்த்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக சொன்னார்கள். இதற்கு பிறகுதான் பெற்ற தந்தையே குழந்தையை இவ்வளவு கொடூரமாக கொன்றது தெரியவந்தது. போலீசார் ராஜீவை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

English summary
Father killed New born baby near Chidambaram
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X