கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓசி பயணம்.. 10கிமீ கத்தி கத்தி உயிரைவிட்ட கண்டக்டர்.. கெத்து காட்டிய போலீஸ்காரர்.. நடவடிக்கை பாயுமா?

போலீசுடன் வாக்குவாதம் செய்த கண்டக்டர் மரணடைந்தார்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓசி பயணம்.. 10கிமீ கத்தி கத்தி உயிரைவிட்ட கண்டக்டர்.. கெத்து காட்டிய போலீஸ்காரர்..வீடியோ

    விருத்தாச்சலம்: அரசு பஸ் கண்டக்டருக்கும், போலீஸ்காரருக்கும் 10 கி.மீ. தூரத்துக்கு சண்டை நடந்ததில், கண்டக்டர், ஓடும் பஸ்ஸிலேயே நெஞ்சை பிடித்து கொண்டு விழுந்து இறந்துவிட்டார். ஓசி பயணம் செய்த போலீஸ்காரரோ, கொஞ்சமும் குற்ற உணர்வு இல்லாமல் கெத்தாக இருந்ததால், பொதுமக்களே அவரை சிறைபிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இப்போது இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

    திருச்சியிலிருந்து கடலூருக்கு அரசு பஸ் ஒன்று சென்றது. விருத்தாசலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அதில் போலீஸ்காரர் ஒருவர் மஃப்டியில் ஏறியுள்ளார். திட்டக்குடி ஸ்டேஷனில் வேலை பார்த்த அவர் பெயர் பழனிவேல்.

    ஆனால் அவர் போலீஸ்காரர் என்பதை தெரியாத கண்டக்டர் கோபிநாத், அவரிடம் சென்று டிக்கெட் எடுங்க என்று சொல்லி உள்ளார். அதற்கு பழனிவேல், நான் போலீஸ், டிக்கெட் எடுக்க தேவையில்லை என்று பதிலளித்துள்ளார்.

    காலம் கணிந்து வருகிறது.. சு.சாமிக்கு இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காது.. என்ன செய்ய போகிறார்?காலம் கணிந்து வருகிறது.. சு.சாமிக்கு இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காது.. என்ன செய்ய போகிறார்?

    கண்டக்டர்

    கண்டக்டர்

    அதற்கு கண்டக்டர், போலீஸுன்னா, ஐடி (அடையாள அட்டை) காட்டுங்க என்று கேட்டதற்கு, பழனிவேல் மறுப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. ஐடி கார்டு இல்லேன்னா கீழே இறங்கிடுங்க என்று கண்டக்டர் சொல்லவும்தான் பிரச்சனை ஆரம்பமாகி உள்ளது. பஸ்ஸில் இருந்த பயணிகளும் "ஐடி-கார்டு எடுத்து ஒருமுறை காட்டி விடுங்களேன், பிரச்சனை முடியட்டும்' என்று சொன்னார்கள். ஆனாலும் பழனிவேல் கேட்காமல், கண்டக்டருடன் விவாதம் செய்து கொண்டே வந்தார்.

    ஊமங்கலம்

    ஊமங்கலம்

    கண்டக்டரும் இதை விடவில்லை.. சுமார் 10 கி.மீ தூரத்துக்கு இப்படியே காரசாரமாக சண்டை போட்டு கொண்டு வந்தனர். ஒருகட்டத்தில் ஊமங்கலம் அருகே வந்தபோது, கண்டக்டர் கோபிநாத் திடீரென பஸ்ஸுக்குள்ளேயே மயங்கி விழுந்தார். இதனால் பயணிகள் பதறிவிட்டனர்.

    நெய்வேலி

    நெய்வேலி

    உடனடியாக நெய்வேலியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அந்த பஸ்ஸிலேயே கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் ஆஸ்பத்திரி வெளியே ஒரு பெஞ்சில் கண்டக்டரின் சடலம் கிடத்தப்பட்டது. இதை பார்த்ததும்தான் பயணிகள் கொதித்து போய்விட்டனர். உயிரிழப்புக்கு போலீஸ்காரர் தான் காரணம் என்று கூறி அவரை சிறைபிடித்தனர்.

    கெத்து

    கெத்து

    ஆனாலும் பழனிவேல் கொஞ்சமும் அசரவே இல்லையாம். எங்கயோ, யாருக்கோ, எதுவுவோ நடந்துள்ளதுபோல, தன்னுடைய செல்போனை வைத்து கேஷூவலாக பேசி கொண்டிருந்தார். இதனால் பயணிகள் இன்னும் ஆத்திரம் அடைந்து, மந்தாரக்குப்பம் போலீசார் வந்ததும், அவரை ஒப்படைத்தனர்.

    கறார்

    கறார்

    அப்போது போலீசார் நடத்திய விசாரணயில், டியூட்டி முடித்துவிட்டு பழனிவேல் பஸ்ஸில் ஏறியுள்ளார். ஆனால் ஐடி கார்டு அவரிடம் இல்லையாம். அதனால்தான் பேசி சமாளித்து விடலாம் என்று தகராறு வரை கொண்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இவருக்கு நேர் எதிராகவும், பணியில் கறாராகவும் இருந்திருக்கிறார் கண்டக்டர்.

    ஓசி பயணம்

    ஓசி பயணம்

    யாராக இருந்தாலும் ஓசியில் பயணம் செய்ய அனுமதிப்பவர் இல்லை என்று தெரிகிறது. இதனிடையே பழனிவேல் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், உயிரிழந்த கண்டக்டர் குடும்பத்துக்கு உரிய நஷ்ட ஈடு தர வேண்டும் என்று போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

    English summary
    Government Bus Conductor died while arguing with Policeman and Police enquiry is going on it in Cuddalore District
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X