• search
கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மருமகளையும் விட்டு வைக்காத தாத்தா.. நேர்லயே பார்த்துவிட்ட பேரன்.. வெலவெலத்து போன விருதாச்சலம்

Google Oneindia Tamil News

கடலூர்: 71 வயசு தாத்தாவை பேரனே கொன்றுவிட்டார்.. ஏன் தெரியுமா? பல பெண்களுடன் தாத்தாவுக்கு உறவு இருந்துள்ளது.. மருமகளைகூட விட்டு வைக்க காணோம்.. அந்த ஆத்திரத்தில் தூக்கி போட்டு மிதித்து கொன்றே விட்டார் அவரது சொந்த பேரன்..!
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள கிராமம் மேலப்பாளையூர்.. இங்கு வசித்து வந்தவர் தவலிங்க சிவராயர்.. இவர்தான் அந்த தாத்தா.. 71 வயதாகிறது.. ஆரம்பம் முதல் இப்போது வரை விவசாயம்தான் பார்த்து வருகிறார்.

ஊர் பெரியவர் என்பதால், அங்குள்ள கோயிலில் தர்மகர்த்தாவாகவும் இவர் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 8ம் தேதியில் இருந்து தாத்தாவை காணோம்.. வெளியில் போவதாக சொல்லி விட்டு சென்றவர் வீடு திரும்பவே இல்லை.. செல்போனும் ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டிருந்தது.

 "ரிசல்ட்".. கியரை மாற்ற தயாராகிறதா அதிமுக.. இருவரில் "அவர்" யார்.. வட்டமடிக்கும் எதிர்பார்ப்புகள்!

புதர்

புதர்

அதனால், குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர்.. இறுதியில் அந்த பகுதியில் உள்ள ஒரு புதரில் தாத்தா சடலமாக கிடந்தார்.. உடம்பெல்லாம் ரத்தக்காயம் இருந்தது.. யாரோ அவரை அடித்து கொன்றதற்கான தடயங்களும் இருந்தன.. இதையடுத்து, கருவேப்பிலங்குறிச்சி போலீசாருக்கு உடனடியாக தகவல் பறந்தது. போலீசாரும் விரைந்து வந்து, சடலத்தை மீட்டனர்..

கொலையாளி

கொலையாளி

போஸ்ட் மார்ட்டத்துக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.. ஆனால், கொலையாளியை கண்டுபிடிக்கும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என்று குடும்பத்தினர் உறுதியாக சொல்லிவிட்டனர். இதன் காரணமாக, கடந்த 10 நாட்களாகவே, இறந்தவர்களை எடுத்துச் செல்லும் பாடை கட்டப்பட்டும், சடலத்தை புதைப்பதற்காக தோண்டப்பட்ட குழியும் மூடாமலேயே இருந்தன... இதையடுத்து போலீசார் விசாரணயை முடுக்கிவிட்டனர்.. ஆனால், ஒரு க்ளூவும் கிடைக்கவில்லை..

தாத்தா

தாத்தா

மோப்ப நாய் உதவியுடனும், தடவியல் நிபுணர்களின் உதவியுடனும் விசாரணைகள் ஆரம்பமானது.. தாத்தாவை யாராவது சொத்துக்காக கொன்றுவிட்டார்களோ என்ற கோணங்களில் விசாரணை நடந்தது.. 40-க்கும் மேற்பட்டோரை விசாரித்தும் பலன் கிட்டவில்லை.. அதனால், கடைசியாக தாத்தாவின் செல்போனை ஆய்வு செய்தனர்.. அவரது பேரன், அதாவது மகன் வழி பேரன் ரஞ்சித் என்பவர்தான் அவரிடம் கடைசியாக பேசியது தெரியவந்தது..

பழக்கம்

பழக்கம்

இதையடுத்து ரஞ்சித்தை விசாரணை வளையத்துக்குள் போலீஸ் கொண்டு வந்தது.. இறுதியில் எல்லா உண்மையையும் கக்கிவிட்டார். "ஆமா.. தாத்தாவை நான்தான் கொன்றேன்.. 71 வயசாகியும் அடங்கல.. பல பெண்களிடம் பழகி வந்தார்.. சொந்த மருமகளையும் விட்டு வைக்கவில்லை.. 45 வயதான என் அம்மாவிடமும் தகாத உறவு வைத்திருந்தார்.. இவர்கள் பல நேரங்களில் நெருக்கமாக இருந்தனர்.. இதை கண்ணெதிரிலேயே நான் பார்த்துவிட்டேன்..

வாக்குமூலம்

வாக்குமூலம்

அதனால்தான், நண்பர் செல்வகுமாருடன் சேர்ந்து தாத்தாவை அடித்து கொன்றேன்" என்று கூறியுள்ளார். இந்த இந்த வாக்குமூலத்தை அடுத்து, போலீசார் ரஞ்சித்தையும், நண்பரையும் கைது செய்தனர்.. தாத்தாவை பேரனே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Grandson Killed grandfather for having illicit affair with his mother
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X