• search
கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மஞ்சள் நீராட்டு விழா.. பறையிசையுடன் மாட்டு வண்டியில் ஊர்வலம்.. விருதாச்சலத்தை அசத்திய தாய்மாமன்கள்

Google Oneindia Tamil News

கடலூர்: தங்கையின் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில், தமிழ் பாரம்பரிய கலாச்சார முறையில், பறையிசை மேளத்துடன், மாட்டு வண்டியில் சீர்வரிசையோடு வந்து, தாய் மாமன்கள் கலக்கிவிட்டனர்.. இந்த தாய்மாமன்கள்தான், விருதாச்சலத்தின் மொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

  மஞ்சள் நீராட்டு விழா.. பறையிசையுடன் மாட்டு வண்டியில் ஊர்வலம்.. விருதாச்சலத்தை அசத்திய தாய்மாமன்கள்

  அன்றைய காலங்களில், வீட்டில் உள்ள பெண்களுக்கு ஏதேனும் விசேஷம் என்றால், தாய்மாமன்களின் பங்குதான் பிரதானமாக பார்க்கப்படும்.

  தமிழகத்தில் கொரோனா தீவிரம் - ஐசியூ நோயாளிகள், ஆக்சிஜன் தேவைப்படுவோர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிப்பு தமிழகத்தில் கொரோனா தீவிரம் - ஐசியூ நோயாளிகள், ஆக்சிஜன் தேவைப்படுவோர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிப்பு

  ஒரு பெண்ணின் வளர்ச்சியில், தாய்க்கு பிறகு தந்தைக்கு கூட இல்லாத உரிமையும், அங்கீகாரமும் அந்த தாய்மான்களுக்கு உண்டு.. அப்படித்தான் நம் முன்னோர்கள் கருதினார்கள்.. தாய்மாமன்களும் தங்களுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து வீட்டு பெண்களை பத்திரமாக பாதுகாத்தார்கள்..

   சீர்வரிசைகள்

  சீர்வரிசைகள்

  அந்த பெண்ணுக்கு ஒரு நல்ல காரியம் நடக்கும்போது, தாய்மாமன்கள் ஊரே மூக்கின்மீது விரல் வைக்கும் அளவுக்கு சீர் வரிசைகளை செய்து அசத்திவிடுவார்கள்.. ஆனால், நவீனம் வளர வளர இதெல்லாம் காணாமல் போய்விட்டது.. இன்றைய பிள்ளைகளும் அன்றைய நடைமுறைகள் முழுவதுமாக தெரியாமல் வளர்க்கப்படுகிறார்கள்.. விசேஷம் என்றால்கூட உறவினர்கள் நேரில் வந்து வாழ்த்தும் இயல்பே குறைந்து போய்விட்டது.. இப்படிப்பட்ட குறைகளையெல்லாம் நொறுக்கும்படி, ஒரு நெகிழ்ச்சி சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.

   தாய்மாமன்கள்

  தாய்மாமன்கள்

  விருத்தாசலம் ரயில்வே மண்டபத்தில் ரயில்வே துறையில் பணிபுரிபவர் கவிதா செல்வராசு.. இவரது மகள் மகள் அபிதாவுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்துள்ளது.. அபிதாவுக்கு 7 தாய்மாமன்களாம்.. இதில் மூத்தவர் சின்னசேலம் வி.அலம்பலம் கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்பவர்தானாம்.. இவர் தலைமையில் குடும்பத்தினர் கிளம்பி அபிதாவின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வந்துள்ளனர்... வண்டிகளில் சீர்வரிசையோடு உறவினர்கள் புடைசூழ, மரபுக் கலையான பறையிசை மேளத்துடன், விருதாச்சலத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்துள்ளனர்..

   பூக்குடை

  பூக்குடை

  பிறகு, அபிதாவை தாய்மாமன் பிரபு, மாட்டு வண்டியில் உட்கார வைத்து, ஊர்வலமாக மண்டபத்தை வந்தடைந்தார்.. பெண்ணின் தாய்மாமன்கள் பூக்குடையை தூக்க, அந்த குடையின் நடுவில் பெண் நடந்துவர, விழா மேடைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.. தமிழ் பாரம்பரிய வாழ்வியலை பறைசாற்றும் வகையில் கீற்றுகளால் ஓலை கூரை குடில்( வீடு) அமைக்கப்பட்டிருந்து.. இருபுறமும் காகித அட்டையால் மாடு, கட்டவண்டி, ஏர் கலப்பைகளை தூக்கி செல்லும் பெண் விவசாயி, ஆண் விவசாயி படங்களும் அமைக்கப்பட்டிருந்தது.

   மஞ்சள் நீராட்டு விழா

  மஞ்சள் நீராட்டு விழா

  மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மண்டப மேடையின் அலங்கார வீட்டில் இந்த மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.. இது காண்போரை தமிழர்களின்அக்கால சூழலுக்கு அழைத்து சென்றுவியப்பில் ஆழ்த்தியது.. இந்த விழா குறித்து தாய்மாமன் பிரபு சொல்லும்போது, "இது போல் ஒவ்வொரு தமிழனும் நமது அக்கால தமிழ்கலாச்சாரத்தை பயன்படுத்தி மஞ்சள் நீராட்டு, திருமணம், தமிழர்களின் எந்த விழாவாக இருந்தாலும் செய்ய வேண்டும்..

   வீடியோ

  வீடியோ

  இந்த மஞ்சள் நீராட்டு விழாவினை தமிழர் கலாச்சாரத்தை பின்பற்றி நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்... இந்த மஞ்சள் நீராட்டு விழாவின் போட்டோக்களும், வீடியோக்களும்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன... இன்றைய பரபரப்பான எந்திர உலகில், ஒருவரையொருவர் நலம் விசாரிக்ககூட மனசில்லாத வாழ்வியல் சூழலில், அபிதாவின் தாய்மாமன்களின் செயல்கள் அனைவரையும் அசரடித்து வருகின்றன.

  English summary
  Happy incident: Thai maaman seer attracts attention at Virudhachalam procession with relatives
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X