India
  • search
கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கன்னத்தில் ஒன்று தந்த மாப்பிள்ளை.. அப்டியே உறைந்த கல்யாண பெண்.. கப்சிப் ஆன மண்டபம்.. செம ட்விஸ்ட்!

Google Oneindia Tamil News

கடலூர்: ரிசப்ஷனில் யாருமே எதிர்பாராத வகையில் மாப்பிள்ளை செய்த காரியம், அந்த கல்யாணமே நின்றுவிட்ட அளவுக்கு சென்றுவிட்டது.. பண்ருட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது..!

பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அந்த மாப்பிள்ளை.. சாப்ட்வேர் என்ஜினீயர்.. சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும், பண்ருட்டியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்தனர்.. மணமகள் எம்எஸ்சி பட்டதாரி..

முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறது பாஜக! மக்கள் பாடம் புகட்டுவார்கள்! காங்கிரஸ் சாடல்! முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறது பாஜக! மக்கள் பாடம் புகட்டுவார்கள்! காங்கிரஸ் சாடல்!

 ரிசப்ஷன்

ரிசப்ஷன்

மணமக்களின் பூரண சம்மதத்தை பெற்றதும், இந்த திருமணத்தை தடபுடலாக இரு குடும்பத்தினரும் ஏற்பாடு செய்தனர். அதன்படி நேற்று காலை காடாம்புலியூரில் உள்ள ஒரு மண்டபத்தில் இவர்களுக்கு திருமணம் நிச்சயமானது.. இதற்கான ஏற்பாடுகளை கடந்த சில நாட்களாகவே இருவீட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் செய்திருந்தனர்... நேற்று முன்தினம் இரவு ரிசப்ஷன் வைத்துள்ளனர்.. காடாம்புலியூர் திருமண மண்டபத்திலேயே இந்த ரிசப்ஷனும் நடந்துள்ளது..

டான்ஸ்

டான்ஸ்

ஏராளமான உறவினர்களும், நண்பர்களும் மண்டபத்தில் குவிந்தனர்.. விருந்தும் உபசாரமும் களை கட்டிக் கொண்டிருந்தது.. மற்றொரு பக்கம் ரிசப்ஷனில் பாட்டுக் கச்சேரியும் நடந்தது.. இதில் ஒரு பாட்டுக்கு, மணமக்கள் இருவரும் ஜோடியாக ஒரு டான்சும் ஆடினார்கள்.. மணமக்கள் ஆடும்போது, மணமகளின் சொந்தக்கார இளைஞர் ஒருவரும் இவர்களுடன் டான்ஸ் ஆடியுள்ளார்.. அவர் இந்த பெண்ணுக்கு சகோதரர் முறை ஆகிறது.. ஆனாலும் அவர் டான்ஸ் ஆடியது மாப்பிள்ளைக்கு பிடிக்கவில்லை.

 கல்யாண பெண்

கல்யாண பெண்

அதனால், மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார்.. சத்தமாக அந்த இளைஞரை பார்த்து கத்த ஆரம்பித்தார்.. அப்போதும் ஆத்திரம் தீராமல், திடீரென பக்கத்தில் நின்றிருந்த கல்யாண பெண்ணின் கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைந்தார்... இதனால் மணமகள் அப்படியே ஷாக் ஆகி உறைந்துபோனார்... அங்கிருந்த யாருமே இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை... மண்டபமே ஒரே செகண்டில் கப்சிப் என்றாகிவிட்டது... ஒருநிமிடம் நிலைகுலைந்து போன கல்யாண பெண், பிறகு சுதாரித்து கொண்டு, அனைத்து சொந்தங்கள் முன்னிலையில் தன்னை இப்படி கன்னத்தில் ஓங்கி அறைந்த இந்த மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொள்ளமாட்டேன் என்று மேடையிலேயே அறிவித்தார்..

 ஆறுதல்

ஆறுதல்

பிறகு ஓவென கதறி அழுதார்... இப்பவே இப்படி அடிக்கிறார் என்றால், கல்யாணத்துக்கு அப்பறம் என் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்று ஆவேசமாக கத்தினார் மணப்பெண்.. தன்னுடைய பெற்றோரிடம் கையெடுத்து கும்பிட்டு, இந்த கல்யாணம் வேணாம் என்று அழுது கொண்டே கெஞ்சினார்.. பெண்ணின் பெற்றோருக்கும் இது அதிர்ச்சி என்றாலும், மகளை வந்து தேற்றினார்கள்.. சொந்தக்காரர்கள் எல்லாம் மேடைக்கு வந்து ஆறுதல் சொல்லி சமாதானம் செய்ய முயன்றார்கள்.. ஆனாலும் யார் பேச்சையும் கல்யாண பெண் கேட்கவில்லை.. "கல்யாணத்தை நிறுத்துங்க" என்று சொல்லிவிட்டு, கடகடவென மண்டபத்தை விட்டு வெளியேறினார்...

 மன்னிப்பு

மன்னிப்பு

இதையெல்லாம் மாப்பிள்ளை பார்த்து கொண்டே நின்றார்.. பிறகு பெண் வீட்டாரிடம் வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்... கல்யாண பெண்ணின் அப்பா காலில் வந்து மாப்பிள்ளை விழுந்து மன்னிப்பும் கேட்டார்.. ஆனாலும் பெண்வீட்டார் சமாதானம் ஆகவில்லை... திருமணத்திற்கு கொண்டுவந்த சீர்வரிசை பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு, மணமகளையும் காரில் உட்கார வைத்து பண்ருட்டிக்கு கிளம்பி சென்றுவிட்டனர்... பிறகு, உடனடியாக மணமகளின் பெற்றோர், உறவினர்கள் இரவோடு இரவாக கூடிப்பேசி, உறவினர் ஒருவரை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்தனர்..

 புது மாப்பிள்ளை

புது மாப்பிள்ளை

அவர் செஞ்சியை சேர்ந்தவராம்.. ஆனால், பிளஸ் 2 வரை படித்துள்ளார்.. இந்த கல்யாணத்துக்கு அவர் வரவில்லை.. மாப்பிள்ளையாக தேர்வு செய்யப்பட்டதை அவருக்கு தகவல் சொல்லி, அதற்கு பிறகு செஞ்சியில் இருந்து பண்ருட்டிக்கு வரவழைத்தனர்.. பிறகு மறுநாள் காலை அதாவது நேற்றைய தினம் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மணப்பெண்ணுக்கும், திடீர் மாப்பிள்ளைக்கும் கல்யாணம் நல்லபடியாக நடந்து முடிந்தது.. இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அந்த பழைய மாப்பிள்ளை என்ன ஆனார் என்றே தெரியவில்லை..!

English summary
In Panruti The bride who stopped the wedding because the groom beaten
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X