கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆன்லைன் கிளாசுக்கு செல்போன் வாங்கி தராததால்.. 15 வயது மாணவன் தற்கொலை.. கடலூரில்!

Google Oneindia Tamil News

கடலூர்: ஆன்லைன் கிளாசில் பங்கேற்பதற்காக செல்போன் வாங்கி தரும்படி மாணவன் கேட்டுள்ளார்.. ஆனால், கையில் காசு இல்லை என்று பெற்றோர் வாங்கி தர மறுக்கவும், மனமுடைந்த அந்த 15 வயது சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது லாக்டவுன் அமலில் உள்ளது... ஓரளவு தளர்வுகள் ஆங்காங்கே மாநிலங்களில் அமல்படுத்தி வந்தாலும், இன்னும் பள்ளிகள் எதுவும் திறக்கப்படவில்லை.. கொரோனாவைரசும் முற்றிலுமாக ஒழியவில்லை.

 lockdown: 15 year old student unable to attend online classes commits suicide in cuddalore

அதனால் எப்படியும் ஸ்கூல் திறக்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று சொல்கிறார்கள்.. இந்த நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறார்கள்.. எல்கேஜி பிள்ளைகளுக்குகூட ஆன்லைன் கிளாஸ்கள் நடத்தப்படுகிறது.

இந்த ஆன்லைன் கிளாசுக்கு மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள்தான் அவசியம்.. இந்த போன் இல்லாததால், மாணவரால் ஆன்லைன் கிளாசில் பங்கேற்க முடியவில்லை.. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கிராமம் சிறுதொண்டமாதேவி.. இந்த கிராமத்தை சேர்ந்த மாணவன் 10-ம் வகுப்பு படிக்கிறார்.. 15 வயதாகிறது..

ஒரு தனியார் பள்ளியில் இவர் படித்து வந்த நிலையில், செல்போன் வேண்டும் என்று தன் பெற்றோரிடம் கேட்டுள்ளார்.. ஆனால் கையில் காசு இல்லாததால், வாங்கி தர முடியாது என்று பெற்றோர் சொல்லி உள்ளனர்.. இதனால் மன விரக்தியில் அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது சம்பந்தமான விசாரணையும் நடக்கிறது.

நடுராத்திரி பெட்ரூமில் பிணமாக தொங்கிய புதுமணப்பெண் பிரியங்கா.. சென்னையில் ஒரு ஷாக்நடுராத்திரி பெட்ரூமில் பிணமாக தொங்கிய புதுமணப்பெண் பிரியங்கா.. சென்னையில் ஒரு ஷாக்

இப்படித்தான் கடந்த ஜுன் மாதமும் கேரளாவில் ஒரு மாணவி செல்போன் இல்லாததால் தீக்குளித்து இறந்துவிட்டார்.. இந்த மாணவ, மாணவிகளின் தற்கொலைகளை சாதாரணமாக எடுத்து கொண்டு கடந்து விட முடியாது. எத்தனையோ கிராமப்புறங்களில், தங்கள் பிள்ளைகளாவது நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கஷ்டப்பட்டு ஏழைகள் படிக்க வைத்து வருகின்றனர்

இவர்களுக்கு ஃபீஸ் கட்டுவதே பெரிய சிரமமாக இருக்கும் நிலையில், எல்லார் வீடுகளிலும் ஸ்மார்ட் போன் இருக்குமா? படிக்கிற பிள்ளைகள் கையில் அவைகளை வாங்கி தர பெற்றோரால் முடியுமா என்பது கேள்விக்குறிதான்... ஸ்மார்ட் போன் இருந்தால்தான் ஆன்லைன் கிளாஸில் பங்கெடுக்க முடியும்.. அப்படி இருக்கும்போது, ஸ்மார்ட் போன் இல்லாதவர்களுக்கு இந்த கிளாஸ்களில் பலனும் இருக்காது..

அதுமட்டுமில்லை, ஸ்மார்ட் போன் இல்லாத பிள்ளைகளுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டு விடுகிறது.. சின்ன வயசு பிள்ளைகளால் மற்ற சக நண்பர்களிடம் அவமானமடைவதாக கருதி கொள்கின்றனர்.. அதனால், இந்த ஆன்லைன் கிளாஸ் உட்பட மத்திய, மாநில அரசுகள் மாணவர்களின் நலனில் கூடுதல் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!

English summary
lockdown: 15 year old student unable to attend online classes commits suicide in cuddalore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X