கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடையாள அட்டையில் குழப்பம்.. கடலூர் அமமுக வேட்பாளர் கார்த்திக் வேட்புமனு நிராகரிப்பு.. அதிர்ச்சி!

கடலூர் அமமுக வேட்பாளர் கார்த்திக் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

கடலூர்: கடலூர் அமமுக வேட்பாளர் கார்த்திக் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.

லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றோடு தமிழகத்தில் நிறைவு அடைந்தது. நேற்று பல்வேறு முக்கிய தலைவர்கள், வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். நேற்று மதியம் 3 மணியோடு வேட்புமனுத்தாக்கல் நிறைவு அடைந்தது.

இந்த நிலையில் நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக குக்கர் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருந்தது. இந்த வழக்கில் 12 மணி அளவில்தான் தீர்ப்பு வந்தது. இதன் காரணமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் மிகவும் காலதாமதமாகத்தான் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.

Lok Sabha Elections: AMMK candidate Karthick nomination has been rejected in Cuddalore

சரியாக 2-3 மணிக்கு இடையில் எல்லா அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களை நேற்று தாக்கல் செய்தனர். அவசரஅவசரமாக இவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ததில் சில குளறுபடிகளும் நிகழ்ந்து இருக்கிறது.

இந்த நிலையில் இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. இதில், கடலூர் அமமுக வேட்பாளர் கார்த்திக் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. இது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒசூரில் 10 பேருடன் சென்று வேட்புமனு- சர்ச்சையில் சிக்கிய பாலகிருஷ்ணா ரெட்டியின் மனைவிஒசூரில் 10 பேருடன் சென்று வேட்புமனு- சர்ச்சையில் சிக்கிய பாலகிருஷ்ணா ரெட்டியின் மனைவி

வேட்பாளர் கார்த்திக்கை முன்மொழிந்தவர்களின் அடையாள அட்டையில் மாற்றம் உள்ளதால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டையில் சில மாற்றம் உள்ளதால் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டபோதே ஒவ்வொரு கட்சி சார்பாகவும் இன்னொரு வேட்பாளர் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால் அமமுக சார்பாகவும் இன்னொரு நபர் இங்கு வேட்புமனு தாக்கல் செய்திருப்பார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் அமமுக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

English summary
Lok Sabha Elections: AMMK candidate Karthick nomination has been rejected in Cuddalore due to ID card mis match.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X