கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்... வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உணவு வழங்கிய தமிமுன் அன்சாரி கட்சி..!

Google Oneindia Tamil News

கடலூர்: கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் வெள்ளநீரில் சென்று பொதுமக்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் உணவு விநியோகம் செய்யப்பட்டது.

ஜாதி-மதம் என்ற பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அன்பு ஒன்றை மட்டும் குறிக்கோளாக கொண்டு செய்யப்பட்டு வரும் இந்த தொண்டுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Manithaneya jananayaga katchi provided food in the flooded areas

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள இந்திரா நகர், பள்ளிப்படை, பூதகேணி உள்ளிட்ட இடங்கள் வெள்ளநீரால் முழுமையாக சூழப்பட்டுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியில் கால் வைக்க முடியாத அவலம் அங்கு ஏற்பட்டுள்ளது. முழங்காலில் இருந்து மார்பளவு வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது.

அண்ணன் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்... பெங்களூரு புறப்பட்டுச் சென்ற ரஜினிகாந்த்..!அண்ணன் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்... பெங்களூரு புறப்பட்டுச் சென்ற ரஜினிகாந்த்..!

இப்படிப்பட்ட பேரிடரான தருணத்தில் மனித நேய ஜனாநயக கட்சி சார்பில் தொடர்ந்து இரண்டு நாட்களாக அப்பகுதி மக்களுக்கு வீடுகளுக்கே சென்று உணவு விநியோகம் செய்யப்பட்டது. இதுமட்டுமல்லாமல் அந்தக் கட்சி சார்பில் உருவாக்கப்பட்டுள்ள பேரிடர் மீட்புக் குழுவில் உள்ள தன்னார்வலர்கள் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் சேவையையும் ஆற்றி வருகின்றனர்.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்ற வள்ளுவரின் குறளுக்கேற்ப சிதம்பரத்தில் நிகழ்ந்துள்ள இந்த நிகழ்வு அனைத்து தரப்பினரையும் கவனிக்க வைத்துள்ளது.

English summary
Manithaneya jananayaga katchi provided food in the flooded areas
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X