கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீரென "ரஜினி"யை கையில் எடுத்த ஸ்டாலின்.. "அவர்" சொல்வாரே.. அது மாதிரி.. விருத்தாச்சலத்தில் பரபர!

ரஜினி வசனத்தை போலவே ஸ்டாலின் பேசி காட்டினார்

Google Oneindia Tamil News

கடலூர்: என்ன ஆனதோ தெரியவில்லை.. திடீரென ரஜினி ரூட்டுக்குள் சென்றுவிட்டார் திமுக தலைவர்.. தன்னுடைய பிரச்சார யுக்தியில் நாளுக்கு நாள் ஸ்டாலினின் விறுவிறுப்பு கூடிக் கொண்டே வருகிறது.

தேர்தல் நெருங்கி வருகிறது.. இதனால், அதிமுக, திமுக கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

எடப்பாடியார் ஒருபக்கம் திமுக தலைவரை கேள்விகளை கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.. இன்னொரு பக்கம் திமுக தலைவரோ படுகேஷூவலாக எடப்பாடியாரை அட்டாக் செய்து பிரச்சாரம் செய்கிறார். சில சமயம், ஸ்டாலின் எம்ஜிஆர் பாட்டும் பாடுகிறார்.

 MK Stalin speaks Rajinikanth dialogue in Cuddalore campaign

ஆனால், இன்றைக்கு ரஜினி ஃபார்முலாவுக்கு வந்துள்ளார்.. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரச்சாரத்தில் இன்று ஸ்டாலின் ஈடுபட்டார்.. அப்போது, "அனைத்து துறைகளிலும் அதிமுக ஊழல் செய்து வருகிறது... ஊழலில் திளைக்கும் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கடமை உங்களுக்கு உள்ளது... அடுத்து அமைய உள்ள திமுக ஆட்சி உங்கள் குறைகளை தீர்க்கும் அரசாக அமையும்..

"ஐயாவுக்கு ஷுகர் போட்டு".. சூடான பிரச்சாரத்துக்கு மத்தியில்.. ஆவி பறக்க டீ சாப்பிட்ட எடப்பாடியார்!

என்னை நம்பி நீங்கள் உங்கள் குறைகளை எழுதி தந்திருக்கிறீர்கள்.. திமுக என்றால் நம்பிக்கை.. ரஜினிகாந்த் சொல்வாரே, ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் முடிக்கிறான், அந்த மாதிரி ஸ்டாலின் சொல்கிறாரு, முதலமைச்சர் செய்கிறாரு" என்றார்.

ஸ்டாலின் இப்படி பேசியதுமே கூட்டமே கை தட்டி மகிழ்ந்தது. கடந்த சில நாட்களாகவே, ஸ்டாலின் என்ன வாக்குறுதிகள் கொடுக்கின்றாரோ, அதை முதல்வர் நிறைவேற்றி வருவதைதான் இப்படி குறிப்பிட்டு ஸ்டாலின் பேசியுள்ளார்.. திடீரென ரஜினிவசனத்தை ஸ்டாலின் பேசியது பரபரப்பை தந்து வருகிறது.

English summary
MK Stalin speaks Rajinikanth dialogue in Cuddalore campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X