நாஞ்சில் சம்பத்தை.. நடுரோட்டில் நாலாபக்கமும் சுற்றி வளைத்த பாஜகவினர்..அதிர்ந்த போலீஸ்.. என்னாச்சு?
கடலூர்: நாஞ்சில் சம்பத் காரை, பிஜேபி நிர்வாகிகள் சிறை பிடித்துவிட்டதால், விருதாச்சலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. இது தொடர்பான விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.
பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மேடைகளில் சரமாரியாக பலரையும் விமர்சிப்பார்.. யாருக்கும் பயப்படவே மாட்டார்..
சமீப காலமாகவே, மத்திய அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனையும் நாஞ்சில் விமர்சித்து வந்தார்.
கவுன்சிலர்களுக்கு ஜாக்பாட்! அமர்வு படி 5% முதல் 10% உயர்வு! ஒன்றியத் தலைவர்களுக்கு புதிய கார்கள்!
அதுவும் பொதுக்கூட்டங்களில், இந்த தலைவர்களை ஒருமையில் தரக்குறைவாக பேசி வந்ததாக பாஜகவினர், இவர்மீது கடுமையான கொந்தளிப்பில் இருந்தனர்.

விருதாச்சலம்
இந்நிலையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இன்று தனியார் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்தார் நாஞ்சில் சம்பத்.. இந்த விஷயம் கேள்விப்பட்டு, நாஞ்சில் சம்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் வரும் வழியில் ஏராளமான பாஜகவினர் குவிந்துவிட்டனர்.. கண்டன கோஷங்களை எழுப்பி முழக்கமிட்டனர். அந்த வழியாக வந்த நாஞ்சில் சம்பத் காரை பாஜகவினர் திடீரென முற்றுகையிட்டனர்..

தள்ளுமுள்ளு
அதற்குள் விஷயத்தை கேள்விப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.. போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த போலீசார் முயன்றனர்.. அப்போது பாஜக நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.. இந்த கைகலப்பில், நாஞ்சில் சம்பத் வந்த கார் டயரானது, பாஜகவின் 2 நிர்வாகிகள் மீது உரசி, லேசான காயம் ஏற்பட்டது.. மேலும் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு, மூக்கு கண்ணாடி உடைந்தது..

உயிர் தப்பினார்
தலைமை காவலர் ஒருவருக்கு இடது காலில் டயர் உரசியதில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.. இதனால் அப்பகுதியில் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. இதுபற்றி பாஜக மாவட்டத் தலைவர் மணிகண்டன், விருத்தாசலம் போலீசில் புகார் தந்தார்.. நாஞ்சில் சம்பத் கார், பாஜக நிர்வாகிகள் மீது மோதி விபத்து ஏற்படுத்திவிட்டார்..

கோபேக் நாஞ்சில்
மேலும், காவல் உதவி ஆய்வாளர், தலைமை காவலர் மீதும் காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்த உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நாஞ்சில் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மணிகண்டன் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.. அந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் உறுதி தந்த பிறகு, பாஜகவினர் கலைந்து சென்றனர். இப்படித்தான், கடந்த சனிக்கிழமையும், அறந்தாங்கிக்கு நாஞ்சில் சம்பத்தை எதிர்த்து பாஜகவினர் 'கோ பேக் நாஞ்சில்' என்று ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.