கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மரணத்தைத் தாண்டி வேல் யாத்திரையில் பங்கேற்றுள்ளேன்... யாரும் தடுக்க முடியாது - குஷ்பு பேச்சு

எத்தனை தடைகள் வந்தாலும் வேல் யாத்திரை நடைபெறும் என்றும் எது நடந்தாலும் நம்முடைய நோக்கம் ஒன்றுதான் என்றும் குஷ்பு கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

கடலூர்: மரணத்தைத் தாண்டி வேல் யாத்திரையில் பங்கேற்று உள்ளேன் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். எந்த விபத்தும் தன்னை தடுத்து நிறுத்த முடியாது என்றும் தடைகளை தாண்டி யாத்திரை நடைபெறுகிறது என்றும் கூறியுள்ளார் குஷ்பு.

Recommended Video

    கடலூர்: தடையை மீறி வேல் யாத்திரை.. எல்.முருகன், குஷ்பு உட்பட பலர் கைது..!

    காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அவ்வப்போது ட்விட்டரில் கருத்து கூறும் குஷ்பு, ஆர்பாட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

    இன்று கடலூரில் நடைபெற்ற வேல் யாத்திரையில் கலந்து கொள்ள தனது கார் மூலம் சென்னையில் இருந்து சென்ற போது அவரது கார் விபத்தில் சிக்கியது. அதில் காயங்களின்றி தப்பினார் குஷ்பு. கடவுள் முருகன் அருளால் உயிர் தப்பியதாக கூறிய அவர் வேறு கார் மூலம் கடலூருக்கு சென்றார்.

    குஷ்பு ட்வீட்

    குஷ்பு ட்வீட்

    இந்த நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட குஷ்பு, எந்த விபத்தும் தன்னை தடுத்து நிறுத்த முடியாது என்றும் முருகன் அருளால் தான் மாற்று காரில் தற்போது யாத்திரையில் கலந்து கொள்ள சென்று கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    தடுக்க முடியாது

    தடுக்க முடியாது

    மேலும் தனது உடல்நலம் குறித்து விசாரித்து அனைவருக்கும் நன்றி என்றும் யாத்திரையைத் தொடர்ந்து நடத்த தடை வந்தாலும் யாத்திரையைத் தொடர்ந்து நடத்துவேன் என்றும் எந்த விபத்தும் தன்னை தடுத்து நிறுத்த முடியாது என்றும் கூறினார்.

    வேல் யாத்திரையில் குஷ்பு பேச்சு

    வேல் யாத்திரையில் குஷ்பு பேச்சு

    கடலூரில் லாரி போல மேடை அமைத்து அதில் வேல் யாத்திரை நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய குஷ்பு,
    மரணத்தைத் தாண்டி வேல் யாத்திரையில் பங்கேற்று உள்ளேன் என்று கூறினார். எத்தனை தடைகள் வந்தாலும் வேல் யாத்திரை நடைபெறும் என்றும் கூறினார்.

    பாஜக வெற்றி

    பாஜக வெற்றி

    எது நடந்தாலும் நம்முடைய நோக்கம் ஒன்றுதான் என்றும் கூறிய குஷ்பு 2021ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி அடையும் என்றும் தெரிவித்தார். மோடி தலைமையிலான ஆட்சிக்கு மக்கள் ஆதரவும் அங்கீகாரமும் அளித்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளார் குஷ்பு.

    English summary
    No one can stop Khushbu speach in Vel Yathra speech
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X