அசிங்கமா இல்ல! நைட் 9 மணிக்கு மேல.. ஏன் ஈகோ? சட்டென அன்புமணி சொன்ன வார்த்தை... ஆடிப்போன பாமகவினர்
கடலூர்: பாமக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் தங்களுக்கு இடையே விமர்சித்துக்கொள்வதாகவும் எந்த கட்சியிலும் இப்படி நடக்கவில்லை என்றும் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பொதுக்குழு கூட்டத்தில் பேசி இருக்கிறார்.
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு கட்சி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார்.
ஆணவக்கொலை.. 21 வயது மாடல் அழகியை சுட்டுக்கொன்ற சகோதரர்.. பாகிஸ்தானில் பயங்கர சம்பவம்

என்.எல்.சி. தேவை இல்லை
அப்போது பேசிய அவர், "பா.ம.க., 2.0 என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் முன்பை விட 10 மடங்கு செயல் திட்டங்களும், நடவடிக்கையும் இருக்கும். நான்கு ஆண்டு காலம் கடுமையாக உழைத்து நாம் ஆட்சிக்கு வர வேண்டும். நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் விவசாகளின் நிலத்தடி நீரை உறிஞ்சி ஆதன் மூலம் கிடைக்கும் லாபத்தை வட மாநிலங்களில் முதலீடு செய்கிறது. தமிழகத்தில் முதலீடும் இல்லை, தமிழர்களுக்கு வேலையும் இல்லை, இதனால் என்.எல்.சி., தேவையே இல்லை.

ஈகோ வேண்டாம்
மேலும் என்எல்சி விவசாயிகளின் நிலங்களை பறிக்க நிற்கிறது அது ஒருபோதும் நடக்காது. என்எல்சிக்கு எதிராக என் தலைமையிலேயே மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என எச்சரித்தார். கடலுார் மாவட்டத்தில்தான் கட்சியினரிடையே ஈகோ உள்ளது. ஒருவரை ஒருவரை தாக்கி பதிவு போடுகின்றனர். எந்த கட்சியிலும் இதுபோல் இல்லை. இரவு 9 மணிக்கு மேல் பதிவுகள் அதிகமாகின்றன. இதபோல் பதிவு போடுவது அசிங்கமாக இல்லையா, நமக்குள் குழப்பம் வேண்டாம். இதுபோல் பதிவு போடுவது கட்சிக்குத்தான் பாதிப்பு.

அன்புமணி உத்தரவு
இதுபோன்று கட்சியினர் ஒருவரை ஒருவர் தாக்கி பதிவு போடக்கூடாது. மேலும் கட்சியினருடன் பிரச்சனை இருந்தால் அதை தலைமையின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள் நிச்சயம் அந்த பிரச்சனை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த மாவட்டத்திலும் ஒரு வேளாண்துறை அமைச்சர் இருக்கிறார். நான் மட்டும் வேளாண்துறை அமைச்சராக இருந்திருந்தால் பலாப்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலை கொண்டு வந்திருப்பேன்.

நான் கோடு போட்டுவிட்டேன்
அதுமட்டுமில்லாமல் முந்திரி பயிர் மதிப்பு கூட்ட தொழிற்சாலை கொண்டு வந்திருப்பேன். நான் கோடு போட்டு விட்டேன். இதன் பிறகாவது திட்டங்களை கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் தமிழக சட்டமன்றத்தில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றிட வேண்டும். அப்படி சட்டம் நிறைவேற்றினால் பாட்டாளி மக்கள் சமுதாயம் முன்னேறும். இந்த சமுதாயம் முன்னேறினால் தமிழகம் முன்னேறும்." என தெரிவித்தார்.