• search
கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

நான் "இங்கிலீஷ்காரன்".. என் வண்டியை எப்படி நிறுத்தலாம்.. குடித்துவிட்டு போலீஸிடம் உதார் விட்ட இளைஞர்

Google Oneindia Tamil News

கடலூர்: நான் கடலூரில் படித்தவன் எனக்கு இங்கிலீஷ் பேசத் தெரியும் என குடித்துவிட்டு உதார்விட்ட இளைஞர் போலீசாரிடம் மாட்டிக் கொண்டவுடன் அரைகுறை இங்கிலீஷில் கத்தியதால் அங்கிருந்தவர்கள் சிரித்தனர்.

    நான் இங்கிலீஷ்காரன்.. என் வண்டியை எப்படி நிறுத்தலாம்.. குடித்துவிட்டு போலீஸிடம் உதார் விட்ட இளைஞர்

    கடலூர் அருகே புதுவை மாநில எல்லையில் ஏராளமான மதுபானக் கடைகள் உள்ளன. இந்த நிலையில் அங்கு சென்று மது அருந்திவிட்டு வருபவர்களை போலீஸார் ஆங்காங்கே பிடித்து மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்ததற்காக அபராதம் விதித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே போக்குவரத்து போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ஒரு நபர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றார்.

    நான் மீண்டும் சொல்கிறேன்.. அதிக விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.. புதினுக்கு ஜோ பிடன் வார்னிங்! நான் மீண்டும் சொல்கிறேன்.. அதிக விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.. புதினுக்கு ஜோ பிடன் வார்னிங்!

    மது அருந்திவிட்டு

    மது அருந்திவிட்டு

    அவரை போலீசார் பிடித்தபோது அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது. போலீஸார் அவரிடம் உங்கள் பெயர் என்ன எந்த ஊர் என்று கேட்டதுதான் தாமதம்; நான் திருச்சிக்காரனோ, திருநெல்வேலிக்காரனோ அல்ல. நான் கடலூர் பகுதியை சேர்ந்தவன். நான் கடலூர் தேவனாம்பட்டினம் கல்லூரியில் படித்தவன்.

    வாகனத்தை நிறுத்தியது ஏன்

    வாகனத்தை நிறுத்தியது ஏன்

    அதனால் எனது வாகனத்தை நீங்கள் நிறுத்தக் கூடாது. என்னை ஏன் நிறுத்தினீர்கள் என தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் கடகடவென உளரித் தள்ளினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார் ஏன் பொதுமக்களுக்கு இடையூறு செய்கிறீர்கள் என்று கேட்ட போது மீண்டும் நிறுத்தாமல் அவர் ஆங்கிலத்தில் சரியாக பேசுவதாக நினைத்துக் கொண்டு உளறினார்.

    இலக்கணத்துடன் பேச்சு

    இலக்கணத்துடன் பேச்சு

    இதனை பார்த்த அப்பகுதியில் உள்ளவர்கள் சிரித்த நிலையில் ஏன் சிரிக்கிறீர்கள் நான் ஆங்கிலத்தில் இலக்கணத்துடன் பேசுகிறேன் என கூறினார். பின்னர் போலீஸார் அவருடைய வாகனத்தை பறிமுதல் செய்ததுடன் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தங்களது பாணியில் சிறப்பாக கவனித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    கட்சிக்காரர்

    கட்சிக்காரர்

    பொதுவாக குடித்துவிட்டு நான் வழக்கறிஞர், இந்த கட்சியை சேர்ந்தவர், அந்த கட்சியை சேர்ந்தவர் என்றும்தான் போலீஸாரிடம் பூச்சாண்டி காட்டுவார்கள். ஆனால் இந்த நபரோ அரைகுறை ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு போலீஸாரிடம் பேசியதோடு தான் இலக்கணத்துடன்தான் பேசுகிறேன் என சொல்லியுள்ளார். என்னதான் இருந்தாலும் ஆங்கிலம் என்பது ஒரு மொழி, அதை குடித்திருந்தாலும் கெத்தாக பேசியுள்ளதை சிலர் வரவேற்கிறார்கள்.

    English summary
    Police arrested a drunkard who created public nuisance in Cuddalore and talks in butler English.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X