கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

300 ரூபாய் கொடுத்தால் ரேஷன் கார்டு ரெடி.. போலியாக அச்சிட்ட கும்பல்.. காட்டுமன்னார்கோவிலில் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள இ-சேவை மையத்தில் போலியாக ஸ்மார்ட் ரேஷன் கார்டு தயாரித்து 300 ரூபாய்க்கு விற்றுவந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் வட்டாட்சியா் அலுவலகம் அருகேயுள்ள தனியார் இ-சேவை மையத்தில் தமிழக அரசின் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் போலியாக அச்சடிக்கப்படுவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் அன்புச்செல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Police have arrested a man who manufactured a fake ration card in Cuddalore district

இதனையடுத்து அந்த கணினி மையத்தில் வட்டாட்சியா் தமிழ்ச்செல்வன் தலைமையில் அதிகாரிகள் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த கணினி மையத்தில் தமிழக அரசின் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் போலியாக அச்சிட்டது தெரிய வந்தது. இதையடுத்து கடையிலிருந்த மடிக் கணினி, பிரிண்டா், 33 போலி குடும்ப அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த கணினி மையத்தை முஹம்மது சம்ஜித் என்பவா் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வருவதும், தமிழக அரசு கடந்த ஓராண்டாக ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை அச்சிடும் பணியை நிறுத்தியுள்ள நிலையில், முஹம்மது சம்ஜித் தனது கணினி மையத்தில் போலியாக குடும்ப அட்டைகளை அச்சிட்டு வழங்கியது தெரியவந்தது.

குடும்ப அட்டை தொலைந்தவா்கள், புகைப்படம், பெயா் மாற்றம் செய்தவா்களுக்கு இந்த மையத்தில் ரூபாய் 300 கட்டணத்தில் புதிய அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் போலி குடும்ப அட்டைகள் தயாரிப்பதற்கு அரசின் இணையதளத்தில் ரகசிய தகவல், கியூஆா் கோட் ஆகியவற்றை எடுத்து புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த போலி அட்டையை பயன்படுத்தி சிலா் நியாயவிலைக் கடைகளில் பொருள்களையும் வாங்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து கணினி மையயத்தின் உரிமையாளா் முஹம்மது சம்ஜித்தை காட்டுமன்னார் கோவில் காவல்நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Police have arrested a man who manufactured a fake ration card in Cuddalore district
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X