கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜராஜ சோழன் மட்டுமல்ல... எல்லா மன்னர்களும் அப்படி தான்... திருமாவளவன் கருத்தால் பரபரப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Pa. Ranjith about Raja Raja Cholan | ராஜராஜ சோழனை விமர்சித்த பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு- வீடியோ

    கடலூர்: ராஜராஜ சோழன் மட்டுமல்ல, தமிழகத்தை ஆண்ட எல்லா மன்னர்களும் சனாதன சக்திகளுக்கு துணை நின்றார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவனர் தலைவர் உமர்பாரூக்கின் நினைவு நாள் பொதுக்கூட்டம் கடந்த 5ம் தேதி இரவு நடந்தது. இதில், திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் பேசுகையில்,

    ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் ஆதிதிராவிட மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது. அவரது ஆட்சிக்காலத்தை பொற்காலம் என்பார்கள். அது உண்மையல்ல. ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் இருண்ட காலம் என்று கூறினார்.

    'இதற்காக' திமுக-காங். எம்.பி.க்கள் 37 பேரும் சொத்துக்களை விற்க வேண்டும்.. பொன் ராதா வேண்டுகோள் 'இதற்காக' திமுக-காங். எம்.பி.க்கள் 37 பேரும் சொத்துக்களை விற்க வேண்டும்.. பொன் ராதா வேண்டுகோள்

    மிகப்பெரிய அயோக்கியத்தனம்

    மிகப்பெரிய அயோக்கியத்தனம்

    தமிழகத்தில் சாதிக்கொடுமைகள் அதிகம் நிகழ்ந்தது தஞ்சை மாவட்டத்தில் தான். எனவே ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்கிறோம். சாதி ரீதியாக மிகப்பெரிய ஒடுக்குமுறை ஆரம்பிக்கப்பட்டது ராஜராஜ சோழனின் ஆட்சி காலத்தில் தான். 400 பெண்களை விலைமாதர்களாக மாற்றி மங்களவிலாஸ் என வைத்து கொண்டு மிகப்பெரிய அயோக்கியத்தனம் செய்தார்கள் என்றும் பேசினார். இயக்குனர் ரஞ்சித்தின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதே நேரம் ஆதரவு குரல்களும் எழுந்துள்ளன.

    திருமாவளவன் கருத்து

    திருமாவளவன் கருத்து

    இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ராஜராஜ சோழன் மட்டுமல்ல, தமிழகத்தை ஆண்ட எல்லா மன்னர்களும் சனாதன சக்திகளுக்கு துணை நின்றார்கள் என கூறியுள்ளார். வரலாறு தெரிந்து கொண்டு கருத்து கூற வேண்டும் என்று சமூக வலைதளங்களிலும், வரலாற்று ஆய்வாளர்களும் கூறி வரும் நிலையில், கருத்து சுதந்திரம் இல்லையா? என்று மறுபுறம் கேள்வி எழுப்புகின்றனர். இதனால், சர்ச்சை தொடர்ந்து வருகிறது.

    முன்ஜாமீன் கோரி மனு

    முன்ஜாமீன் கோரி மனு

    இதனிடையே, தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் போலீசார், இயக்குனர் ரஞ்சித் மீது மதச்சண்டையை தூண்டுவது, கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்படுவதை தவிர்க்க, முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இயக்குநர் பா.ரஞ்சித் மனு தாக்கல் செய்துள்ளார்.

    பா.ரஞ்சித் தரப்பில் விளக்கம்

    பா.ரஞ்சித் தரப்பில் விளக்கம்

    அதே நேரம், வரலாற்று தகவலின் அடிப்படையிலேயே பேசினேன்; எனது கருத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். எனது பேச்சு எந்த சமூகத்தினருக்கும் எதிரானது அல்ல என்று இயக்குநர் பா.ரஞ்சித் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    English summary
    VCK leader Thirumavalavan support for Film Director pa.Ranjith
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X