கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீட் தேர்வு எழுதித்தான் தமிழிசை சவுந்திரராஜன் டாக்டரானாரா? தமிமுன் அன்சாரி பொளேர்

Google Oneindia Tamil News

சிதம்பரம்: நீட் தேர்வு எழுதித்தான் தமிழிசை சவுந்திரராஜன் மருத்துவரானாரா என எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவரும், எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி பிரசாரம் செய்தார்.

படிப்பு

படிப்பு

அப்போது அவர் பேசுகையில் பாஜக மாநில தலைவராக உள்ள தமிழிசை நீட் தேர்வு எழுதித்தான் மருத்துவரானாரா. இதே நிலை நீடித்தால் அனைத்து படிப்புகளுக்கும் நீட் தேர்வு வந்துவிடும்.

திமுக கட்சி

திமுக கட்சி

கஜா புயல் தாக்கிய போது வராத பிரதமர் மோடி தற்போது தேர்தலுக்காக தமிழகத்துக்கு வந்துள்ளார் என்றார் தமிமுன் அன்சாரி. காங்கிரஸ், அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் அறிக்கைகளில் தெரிவித்துள்ளன.

சப்பைக்கட்டு

சப்பைக்கட்டு

ஆனால் பாஜகவோ இதுகுறித்து எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை. எனினும் இதற்கு சப்பைக்கட்டு கட்டும் வகையில் நீட் தேர்வு குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால் பாஜக தேர்தல் அறிக்கையில் அது இடம்பெறவில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் ஏழை மாணவர்கள் பாதிக்காத வண்ணம் பாஜக ஒரு முடிவை எடுக்கும் என்று தமிழிசை தெரிவித்திருந்தார்.

நீட் தேர்வு

நீட் தேர்வு

நீட் தேர்வால் ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு பாதிக்கப்படுவதால் மாணவர்கள் வேதனையில் உள்ளனர். இதனால் அரசு ஏழை பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு ரத்தாகுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

English summary
MLA Tamimun Ansari asks Tamilisai that whether she became Doctor by writing Neet Exams?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X