கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போருக்கு தயார் நிலையில் தமிழக குடிமகன்கள்.. டாஸ்மாக் வெளியே டோக்கனுடன் கலெக்டர்

Google Oneindia Tamil News

கடலூர்: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்குவதற்காக மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

Recommended Video

    Salem Tasmac | மது வாங்குவதற்கு நீண்ட வரிசையில் நின்று வாங்குகின்ற குடிமகன்கள்

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனிடையே ஊரடங்கில் மத்திய அரசு சில தளர்வுகளை அளித்ததால், பல்வேறு மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் கட்டுப்பாடு உள்ள பகுதிகளை தவிர மற்ற இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நிபந்தனைகளுடன் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டன.

    மாலை 3 மணி ஸ்லாட்டுக்கு அதிகாலை 5 மணிக்கே குளித்துவிட்டு குவிந்த மதுப்பிரியர்கள்..திருப்பத்தூரில்.. மாலை 3 மணி ஸ்லாட்டுக்கு அதிகாலை 5 மணிக்கே குளித்துவிட்டு குவிந்த மதுப்பிரியர்கள்..திருப்பத்தூரில்..

    376 கடைகள்

    376 கடைகள்

    அந்த வகையில் விழுப்புரம், கடலூர் கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இருக்கும்
    மொத்தமுள்ள 376 டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிக்கு திறக்கப்பட உள்ளது.

    மதுபானங்கள்

    மதுபானங்கள்

    மேலும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்களை வாங்க வருபவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்கவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தங்களது அடையாள அட்டையில் ஏதேனும் ஒரு அட்டையை வைத்திருக்க வேண்டும் என்றும், கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும், முக கவசம் அணிந்து வருபவர்களுக்கே மதுபானம் வழங்கப்படும் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    தடுப்பு

    தடுப்பு

    அதுமட்டுமின்றி ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடித்து மதுபானம் வாங்கிச்செல்ல ஏதுவாக மரக்கட்டைகள் மூலமும், பேரிகார்டுகள் மூலமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தண்ணீர் தொட்டி

    தண்ணீர் தொட்டி

    இதுதவிர அந்த தடுப்புகளுக்குள் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வசதியாக வெள்ளை நிறத்தில் அடையாள குறியீடுகளும் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மதுபானம் வாங்க வரும் மதுப்பிரியர்கள் நன்கு கைகளை கழுவிய பிறகே மதுபானம் வாங்குவதற்கும், இதற்காக அனைத்து கடைகளின் வளாகத்திலும் தற்காலிகமாக தண்ணீர் தொட்டியும், சோப்பும் வைக்கப்பட்டுள்ளது.

    நீண்ட வரிசை

    நீண்ட வரிசை

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுதையொட்டி, பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே டாஸ்மாக் கடைகளுக்கு வெளியே குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று வருகின்றனர். இதேபோல் விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு அதிகாலையில் இருந்தே குடிமகன்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

    ஊழியர்கள்

    ஊழியர்கள்

    கூட்ட நெரிசலை தவிர்க்க குடிமக்களுக்கு டோக்கன் கொடுத்து மது வழங்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளதையடுத்து, குடிமகன்களுக்கு டோக்கன் எவ்வாறு கொடுப்பது என்பது குறித்து காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் கடை ஒன்றின் வெளியே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    English summary
    Tasmac shops are opened today in Tamil Nadu. There is a long queue in most of the places.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X