கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாங்க வாங்க.. ஏம்ப்பா ஸ்டூலை எடுத்து இப்படி போடுப்பா.. அசத்திய திருமா.. வியந்த நாம் தமிழர் வேட்பாளர்

சிதம்பரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை திருமாவளவன் வாழ்த்தினார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அசத்திய திருமா.. வியந்த நாம் தமிழர் வேட்பாளர்-வீடியோ

    சிதம்பரம்: "ஏம்ப்பா.. அந்த ஸ்டூலை எடுத்து இப்படி போடுப்பா.. வாங்க.. வந்து உட்காருங்க" என்கிறார் திருமாவளவன்! விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இப்படி உபசரிப்பது யாரை தெரியுமா? நாம் தமிழர் கட்சி சிதம்பரம் தொகுதி வேட்பாளர் சிவா ஜோதியைதான்!

    உச்சக்கட்ட பிரச்சாரத்தில் தமிழக கட்சிகள் இறங்கி உள்ளன. இன்னும் சொல்ல போனால் இறுதி கட்டத்தில் உள்ளன!

    இந்நிலையில் சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் களம் இறங்கி உள்ளார். இந்த தொகுதியை பொறுத்தவரை போட்டியே விசிகவுக்கும், அதிமுக வேட்பாளர் சந்திரசேகருக்கும்தான்!

    ராகவா லாரன்ஸ் திடீர் அறிக்கை.. பெயரே குறிப்பிடாமல் யாரோ ஒரு தலைவருக்கு எச்சரிக்கை! ராகவா லாரன்ஸ் திடீர் அறிக்கை.. பெயரே குறிப்பிடாமல் யாரோ ஒரு தலைவருக்கு எச்சரிக்கை!

     சிவா ஜோதி

    சிவா ஜோதி

    திமுகவுக்கு வலிமையான வாக்கு வங்கி இருந்தாலும், விசிகவின் வாக்கு வங்கியும் இங்கு அதிகமாக இருக்கிறது. அதேபோல பாமகவின் வாக்குகளை அதிமுக சாதகமாக்கும் முயற்சியிலும் இறங்கி உள்ளது. அதனால் விசிக-அதிமுக செம டஃப் கொடுத்து வருகின்றன. இதற்கு 3-வது நிலையில் உள்ளது நாம் தமிழர் கட்சிதான். இந்த கட்சி சார்பாக சிவா ஜோதி போட்டியிடுகிறார். இதற்கான வாக்கு சேகரிப்பிலும் அவரும் ஈடுபட்டு வருகிறார்.

     திருமாவளவன்

    திருமாவளவன்

    இப்படித்தான் தனது ஆதரவாளர்களுடன் தொகுதிக்குள் வாக்கு சேகரித்து கொண்டு வரும்போது, திருமாவளவன் தங்கியிருக்கும் இடத்திற்கு எதேச்சையாக வந்துவிட்டார் சிவா ஜோதி. வீட்டிற்கு வெளியே திருமாவளவன் தன் கட்சிக்காரர்களுடன் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தார். திருமாவளவனை பார்த்ததும் சிவா ஜோதி வணக்கம் சொன்னார்.

     சால்வை போர்த்தினார்

    சால்வை போர்த்தினார்

    அவர்களை பார்த்ததும் திருமாவளவன் எழுந்து சென்று, "உள்ளே வாங்க.. ஸ்டூல் எடுத்து போடுப்பா.. உட்காரட்டும்" என்றார். ஆனாலும் நாம் தமிழர் வேட்பாளர் "பரவாயில்லை" என்று சொல்லிவிட்டு.. மரியாதை நிமித்தமாக கீழேயே நின்று கொண்டிருந்தார். உடனே திருமாவளவன் ஒரு சால்வையை எடுத்து அவருக்கு போர்த்தி வாழ்த்து சொன்னார். அங்கிருந்த இரு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் இதை பார்த்து கை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.

    பாராட்டுக்குரியது

    இதுதான் அரசியல் நாகரீகம்.. வேறு வேறு கட்சியை சார்ந்தவர்கள் என்றாலும் வணக்கம் சொல்லி கொள்வதும், நலம் விசாரிப்பதும், அதிலும் இளையவர் என்றால் வாழ்த்து தெரிவித்து ஆசீர்வதிப்பதும்.. வரவேற்புக்குரியது.. பாராட்டுக்குரியது!

    English summary
    VCK Leader Thirumavalavan wished Naam Tamizhar Party Chidambaram Candidate Siva Jothi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X