கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அபூர்வ சூரிய கிரகணம்.. வித்தியாசமாக காட்சியளித்த மரத்தின் நிழல்.. கடலூரில் செம!

Google Oneindia Tamil News

கடலூர்: சூரிய கிரகணத்தின் போது கடலூரில் வித்தியாசமான முறையில் மரத்தின் நிழல் காட்சியளித்தது. இதை அனைவரும் கண்டு களித்தனர்.

பூமியை நிலா நீள் வட்ட பாதையில் சுற்றி வருகிறது. அது போல் சூரியனையும் பூமி சுற்றி வருகிறது. இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொள்ளும் போது கிரகணம் ஏற்படுகிறது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு வரும் போது நிலவு சூரியனை மறைக்கும் நிகழ்வு ஏற்படுகிறது. அப்போது நிலவின் நிழல் பூமியில் விழும்போது சூரியன் மறைகிறது. இதை நாம் சூரிய கிரகணம் என அழைக்கிறோம்.

சும்மா ஸ்டைலா.. சும்மா கெத்தா.. போஸ் கொடுத்த மோடி.. மீமாகும் கமென்டை வரவேற்று என்ஜாய் என ட்வீட்சும்மா ஸ்டைலா.. சும்மா கெத்தா.. போஸ் கொடுத்த மோடி.. மீமாகும் கமென்டை வரவேற்று என்ஜாய் என ட்வீட்

முழு சூரியகிரகணம்

முழு சூரியகிரகணம்

இன்று காலை 8 மணி முதல் நிலவு சூரியனை கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கத் தொடங்கியது. அப்போது சூரியன் பிறை வடிவில் காட்சியளித்தது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் முழு சூரிய கிரகணம் தெரிந்தது.

அறிவியல் நிகழ்வு

அறிவியல் நிகழ்வு

நெருப்பு வளையம் போல் காட்சியளித்த சூரியனை ஏராளமானோர் கண்டு களித்தனர். கடலூர் சில்வர் பீச்சில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சூரிய கிரகணத்தை காணும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதை காண அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்தனர்.

சூரிய வடிகட்டி கண்ணாடி

சூரிய வடிகட்டி கண்ணாடி

60 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் இந்த நிகழ்வை காண மாணவர்கள், பெற்றோர்கள், குழந்தைகள், பொதுமக்கள் குவிந்தனர். இதற்காக சில்வர் பீச்சில் தொலைநோக்கி, சூரிய வடிகட்டி கண்ணாடி உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பெரியார் கல்லூரி

பெரியார் கல்லூரி

இந்த நிலையில் கிரகணத்தின் போது கடலூர் பெரியார் கல்லூரி முன்பு ஆலமரத்தின் மேல் சூரிய ஒளி பட்டபோது தரை முழுவதும் நிலா வடிவத்தில் மரத்தின் நிழல் விழுந்தது. இந்த காட்சியை ஏராளமானோர் கண்டனர்.

English summary
Tree's shadow was different while Solar eclipse happens in Cuddalore Periyar College.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X