கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூரியன் இருக்கா.. பொங்கல் வைக்க பானை இருக்கா.. அரிசி போட கையும் இருக்கு.. திருமாவளவன் அசத்தல் பேச்சு

அரியலூர் அருகே திருமாவளவன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Google Oneindia Tamil News

சிதம்பரம்: அதிமுக பாஜக பாமக கூட்டணி என்பது இயற்கைக்குப் புறம்பான கூட்டணியாகும். அதுவே திமுக விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி இயற்கையானது என்று சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.

சிதம்பரம் தனி தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தொகுதி முழுவதும் கிராமம் கிராமமாக வலம் வரும் திருமாவளவன் பானைச் சின்னத்திற்கு ஆதரவு திரட்டிக் கொண்டிருக்கிறார்.

 VCK Thirumavalavan campaigned in Ariyalur

அரியலூர், குன்னம் பகுதியில் அவர் வாக்கு சேகரித்தபோது வித்தியாசமான முறையில் பேசி மக்களைக் கவர்ந்தார். திருமாவளவன் பேசுகையில், அதிமுக பாமக பாஜக கூட்டணி என்பது முற்றிலும் இயற்கைக்கு ஒவ்வாத ஒன்று. எங்காவது தாமரையில் மாம்பழம் பழுக்கப் பார்த்திருக்கிறீர்களா. அதேபோல வேப்பிலையில் தாமரை மலருமா.. முடியாது. இதனால்தான் அவர்கள் இயற்கைக்குப் புறம்பான கூட்டணி.

மத்த வேட்பாளர்கள் மாதிரி இருக்காதீங்க.. கவலைப்படாதீங்க.. கூடவே இருப்பேன்.. வாக்கு தந்த மகேந்திரன் மத்த வேட்பாளர்கள் மாதிரி இருக்காதீங்க.. கவலைப்படாதீங்க.. கூடவே இருப்பேன்.. வாக்கு தந்த மகேந்திரன்

ஆனால் திமுக தலைமையிலான கூட்டணிதான் இயற்கையான கூட்டணி. இங்கே "சூரியன்" இருக்கிறது. பொங்கல் வைக்க வேண்டுமா.. இதோ இருக்கிறது "பானை". அதில் அரிசியை அள்ளிப் போட "கை" இருக்கிறது. நெல்லை அறுவடை செய்ய தேவையான "கதிர் அரிவாளும்" கூடவே இருக்கிறது. எனவே இதுதான் இயற்கையானது, பொருத்தமான கூட்டணி என்று பேசினார் திருமாவளவன்.

உதயநிதி அசத்தல்

இதற்கிடையே, திருமாவளவனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் வேனிலிருந்தபடி பேசினார். அப்போது விடுதலைச் சிறுத்தையினரிடமிருந்து பெரிய கொடியை கேட்டு வாங்கி தனது கையில் பிடித்தபடி பேசினார். இதனால் கூட்டத்தினர் உற்சாகமடைந்து குரல் எழுப்பினர்.

English summary
VCK Thirumavalavan campaigned near Ariyalaur and praised DMK-VCK-CPM Alliance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X