கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீண்டும் வெடித்தது வன்முறை.. 10 பேர் மண்டை உடைந்தது.. கடலூர் அருகே பரபரப்பு

கடலூர் அருகே இரு சமூகத்தினரிடையே கலவரம் வெடித்ததில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மீண்டும் வெடித்தது வன்முறை.. 10 பேர் மண்டை உடைந்தது-வீடியோ

    கடலூர்: திரும்பவும் ஒரு சாதி மோதல் வெடித்துள்ளது.. சிறுவர்கள் இடையே ஏற்பட்ட சண்டை.. இரு சமூக மோதலாக மாறி.. கல்வீச்சு, தாக்குதல் என உருவெடுத்து.. கடைசியில் 10 பேர் மண்டை உடைந்ததுதான் மிச்சம்.. இப்போது 2 ஊரிலும் போலீஸ் குவிப்பு வரை வந்துவிட்டது!

    பண்ருட்டி அடுத்த K.குச்சிபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் சத்தியமூர்த்தி. வயசு 15 ஆகிறது. பக்கத்து ஊர் பசங்க 4 பேருடன் சேர்ந்து ஊருக்கு பக்கத்துல ஒரு கிரவுண்டில் வாலிபால் விளையாடி கொண்டிருந்தார்.

    நாகர்கோவில்.. வாக்கு எண்ணிக்கை மையத்தில் திடீர் சண்டை.. 2 எஸ்ஐகள் கட்டிப் புரண்டு சண்டைநாகர்கோவில்.. வாக்கு எண்ணிக்கை மையத்தில் திடீர் சண்டை.. 2 எஸ்ஐகள் கட்டிப் புரண்டு சண்டை

    தகராறு

    தகராறு

    அந்த பக்கமாக மேல் கவரப்பட்டு என்ற ஊரை சேர்ந்த சிலர் வந்துள்ளார்கள். கே குச்சிபாளையத்திற்கும் மேல் கவரப்பட்டு கிராமத்திற்கும் எப்பவுமே ஆகாதாம்! ஏற்கனவே வாய்க்கால் தகராறு இருக்கிறதாம்! விளையாடி கொண்டிருந்த சத்தியமூர்த்தியிடம் வம்புக்கு போய் உள்ளனர்.

    நாகர்கோவில்.. வாக்கு எண்ணிக்கை மையத்தில் திடீர் சண்டை.. 2 எஸ்ஐகள் கட்டிப் புரண்டு சண்டைநாகர்கோவில்.. வாக்கு எண்ணிக்கை மையத்தில் திடீர் சண்டை.. 2 எஸ்ஐகள் கட்டிப் புரண்டு சண்டை

    வன்முறை

    வன்முறை

    அப்போது இரு தரப்பிலும் பிரச்சனை வெடித்திருக்கிறது. இரு தரப்பு சண்டை, கொஞ்ச நேரத்திற்கெல்லாம் இரு சமூகமோதலாக மாறியது. இதில் கே.குச்சிபாளையத்தில் உள்ள இரண்டு ஓட்டு வீடுகள் மீது கற்கள் வந்து விழுந்து சேதம் ஆனது. நின்றுகொண்டிருந்த டூவீலர்கள் மீது கற்கள் விழுந்து நாசம் ஆனது.

    10 பேர் காயம்

    10 பேர் காயம்

    இதில் கிட்டத்தட்ட 10 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பாதுகாப்பு

    பாதுகாப்பு

    தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து விசாரணையை கையில் எடுத்து உள்ளனர். தாக்குதலை நடத்திவிட்டு தப்பி ஓடியவர்களையும் தேடி வருகின்றனர். இரு சமூக சண்டை என்பதால், அசாதாரண சூழல் நிலவுவதால் கே குச்சிபாளையம், மேல் கவரப்பட்டு இரண்டு இடங்களிலுமே பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    பரபரப்பு

    பரபரப்பு

    இன்னும் பொன்னமராவதி ஆடியோ விவகாரம் அடங்கவில்லை. ஊரடங்கு உத்தரவு அங்கு அமலில்தான் உள்ளது. அதற்குள் இன்னொரு சாதி கலவரம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    Again violence in Kuchipalayam in Cuddalore and 10 people has admitted in the Hospital
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X