India
 • search
கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஏன் எல்லாரும் உன் மேல கை போடறாங்க".. கொந்தளித்த மாப்பிள்ளை.. பண்ருட்டி திருமணத்தில் நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

கடலூர்: பண்ருட்டியில் நடந்த திருமணத்தில், மணப்பெண்ணின் கன்னத்தை மாப்பிள்ளை அறைந்ததால், திருமணம் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வந்த நிலையில், உண்மையிலேயே நடந்தது என்ன என்ற தகவலை நிச்சயிக்கப்பட்டிருந்த மணமகன் தெரிவித்துள்ளார்.

Recommended Video - Watch Now

  ஏன் எல்லாரும் உன் மேல கை போடறாங்க.. கொந்தளித்த மாப்பிள்ளை.. பண்ருட்டி திருமணத்தில் நடந்தது என்ன?

  பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அந்த மாப்பிள்ளை.. சாப்ட்வேர் என்ஜினீயர்.. சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

  இவருக்கும், பண்ருட்டியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்தனர்.. மணமகள் எம்எஸ்சி பட்டதாரி..

  கன்னத்தில் ஒன்று தந்த மாப்பிள்ளை.. அப்டியே உறைந்த கல்யாண பெண்.. கப்சிப் ஆன மண்டபம்.. செம ட்விஸ்ட்!கன்னத்தில் ஒன்று தந்த மாப்பிள்ளை.. அப்டியே உறைந்த கல்யாண பெண்.. கப்சிப் ஆன மண்டபம்.. செம ட்விஸ்ட்!

   பெற்றோர்கள்

  பெற்றோர்கள்

  இவர்களுக்கு 2 நாட்களுக்கு முன்பு, காடாம்புலியூரில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நிச்சயமானது.. இதற்காக நேற்று முன்தினம் இரவு ரிசப்ஷன் வைத்துள்ளனர்.. காடாம்புலியூர் திருமண மண்டபத்திலேயே இந்த ரிசப்ஷனும் நடந்துள்ளது.. ஏராளமான உறவினர்களும், நண்பர்களும் மண்டபத்தில் குவிந்திருந்தனர்.. விருந்தும் உபசாரமும் களை கட்டிக் கொண்டிருந்தது.. மற்றொரு பக்கம் பாட்டுக் கச்சேரியும் நடந்தது..

  இளைஞர்

  இளைஞர்

  இதில் ஒரு பாட்டுக்கு, மணமக்கள் இருவரும் ஜோடியாக ஒரு டான்சும் ஆடினார்கள்.. அப்போது மணமக்கள் ஆடும்போது, மணமகளின் சொந்தக்கார இளைஞர் ஒருவரும் இவர்களுடன் டான்ஸ் ஆடியுள்ளார்.. அவர் இந்த பெண்ணுக்கு சகோதரர் முறை ஆகிறது.. ஆனாலும் அவர் டான்ஸ் ஆடியது மாப்பிள்ளைக்கு பிடிக்கவில்லை என்பதால், மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார்.. அத்துடன் ஆத்திரம் தீராமல் திடீரென பக்கத்தில் நின்றிருந்த கல்யாண பெண்ணின் கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைந்துள்ளார்.

  அதிர்ச்சி

  அதிர்ச்சி

  இதனால் மணமகள் அதிர்ச்சி ஆகி, இப்பவே தன்னை இப்படி கன்னத்தில் ஓங்கி அறைந்த இந்த மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொள்ளமாட்டேன் என்று மேடையிலேயே அறிவித்துவிட்டு, "கல்யாணத்தை நிறுத்துங்க" என்று சொல்லிவிட்டு, கடகடவென மண்டபத்தை விட்டு வெளியேறினார்... இதையடுத்து, மணமகளின் பெற்றோர், உறவினர்கள் இரவோடு இரவாக கூடிப்பேசி, உறவினர் ஒருவரை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்தனர் மறுநாளே அவருடன் திருமணத்தை முடித்திருந்தனர்.

   மாப்பிள்ளை புகார்

  மாப்பிள்ளை புகார்

  மாப்பிள்ளை பெண்ணை கன்னத்தில் அறைந்ததால்தான் திருமணம் நின்றதாக 2 நாட்களாக சோஷியல் மீடியாவில் செய்திகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.. இந்நிலையில், நடந்த சம்பவத்துக்கு மாப்பிள்ளை ஸ்ரீதர் மறுப்பு தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக பண்ருட்டி காவல்நிலையத்திலும் புகார் தந்துள்ளார்.. பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீதர் சொன்னதாவது:

  திருமணம்

  திருமணம்

  2 வீட்டிலும் பேசிதான் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.. ஆனால் கல்யாணத்துக்கு முன்பு டிஜே பார்ட்டி அவர்கள்தான் வைத்திருந்தனர்.. இந்த பார்ட்டிக்கு எங்கள் குடும்பத்தினரையும் அழைத்திருந்தனர்.. நாங்களும் கலந்து கொண்டோம்.. அந்த பார்ட்டியில் மதுவிருந்தும் நடந்தது.. மணமக்கள் நாங்கள் அங்கு டான்ஸ் ஆடியபோது, பெண் வீட்டை சேர்ந்தவர்கள் சிலர் குடித்துவிட்டு வந்து ஆடினார்கள்.. மணப்பெண்ணின் தோள் மீது கையை போட்டு கொண்டு ஆடவும், நான் அவரது கையை தள்ளிவிட்டேன்.. ஆனால், மணப்பெண்ணை அடிக்கவில்லை..

  பெற்றோர்

  பெற்றோர்

  ஏன் உன் தோள் மேல எல்லாரும் கை போட்டு டான்ஸ் ஆடறாங்க.. எனக்கு பிடிக்கல என்று பெண்ணிடம் சொன்னேன்.. அதற்கு அவர், அப்படித்தான் ஆடுவோம்ன்னு சொன்னாங்க.. உடனே அவங்க அப்பா, அம்மா வந்து, இப்பவே இப்படி பேசுறீயே, கல்யாணத்துக்கு அப்பறம் இன்னும் என்னவெல்லாம் பேசுவே என்று கேட்டு தகராறு செய்தனர்.. அவர்கள் சொந்தக்காரர்கள் எல்லாரும் சேர்ந்து என்னை அடிச்சிட்டாங்க..

  ஆதாரம்

  ஆதாரம்

  அதற்கான வீடியோ ஆதாரத்தை போலீசில் ஒப்படைத்துள்ளேன்.. அதை பார்த்தாலே தெரியும் நான் கல்யாண பெண் கன்னத்தில் அறையவில்லை.. அவர் தோள் மீது கை போடவும், அதை தட்டிவிட்டேன்.. அவ்வளவுதான்.. இந்த கல்யாணத்துக்கு 7 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறேன்.. அதை எனக்கு வாங்கி தர வேண்டும் என்று போலீசில் புகார் தந்திருக்கிறேன்" என்றார்.

  English summary
  Why did The bride stop the wedding? What happened in Panruti Marriage actually?
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X