நைட்டியுடன் நடுத்தெருவில்.. சுற்றி வளைத்து அரை நிர்வாணமாக்கிய இளம் பெண்கள்.. என்ன நடந்தது?
கடலூர்: அரிவாளுடன் நடுரோட்டில் போதையில் அலப்பறை செய்து கொண்டிருந்தார் ஒருவர்.. அவரை அடக்க யாருமே முன்வராத நேரத்தில், சில இளம்பெண்கள் துணிந்து அவரை சுற்றி வளைத்து.. அரை நிர்வாணமாக்கி.. அடக்கிய சம்பவம் ஒன்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த தொண்டங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் பச்சையப்பன்.. இவருடைய மகன் பாஸ்கர்.. அவருடைய சித்தப்பா மகன் வெள்ளையன்... அதாவது அண்ணன் தம்பிகள்.
இவர்கள் இருவரும் சம்பவத்தன்று தண்ணி அடித்துவிட்டு நடுரோட்டில் அலப்பறை செய்திருக்கிறார்கள்.. ஃபுல் போதை, கையில் அரிவாள் வேறு.. போகிற வருகிறவர்களை எல்லாம் அரிவாளை காட்டி மிரட்டி கொண்டிருந்தனர்.

ரவுடிகள்
எல்லாரையும் அசிங்க அசிங்கமாக கெட்ட வார்த்தைகளில் திட்டி ரகளை செய்திருக்கிறார்கள். இவர்கள் 2 பேர் செய்த அமர்க்களத்தை பார்த்து அந்த பகுதியில் இருந்த குழந்தைகள் எல்லாம் பயந்து போய்விட்டனர். இவர்களில் பாஸ்கர்தான் நிஜமாகவே ரவுடியாம்.. அதனால் அவரை யாருமே அடக்க முடியாமல் பயந்து ஒதுங்கி வேடிக்கை பார்த்தவாறே நின்றனர்.

பாஸ்கர்
கோபத்தில் அரிவாளை எடுத்து பாஸ்கர் வெட்டிவிடுவாரோ என்று பயந்து கொண்டு, சில பெரியவர்களும், வீட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டனர்.. ஒரு ஆண்மகனும் பாஸ்கரை அடக்க முடியாத பட்சத்தில், வீறு கொண்டு இளம்பெண்கள் பாஸ்கரை நோக்கி சென்றனர்.. அந்த பெண்கள் எல்லாம் பாஸ்கரனுக்கு சொந்தக்கார பெண்களாம்.. நைட்டி அணிந்து கொண்டும், சுடிதார் அணிந்தும், சேலை அணிந்து கொணடும் பெண் புலிகள் ஆவேசத்துடன் பாஸ்கரை நோக்கி பாய்ந்து கையில் இருந்த அரிவாளை பிடுங்க முயன்றனர்.

ஆபாசம்
அவர்களையும் வெட்டிவிடுவது போல பூச்சாண்டி காட்டினார் பாஸ்கர்.. கெட்ட வார்த்தைகளில் திட்டினால் ஓடிவிடுவார்கள் என்று நினைத்து அவர்களையும் ஆபாசமாக திட்டினார்.. ஆனால் அந்த பெண் சிங்கங்கள் எதற்குமே அஞ்சவில்லையே.. 5, 6 பெண்கள் இருப்பார்கள்.. மொத்தமாக பாஸ்கரனை ரவுண்டு கட்டிவிட்டனர்.. ஆளுக்கு ஒரு பக்கம் கையை பிடிக்க, ஒருவர் காலை பிடிக்க, இன்னொருவர் அரிவாளை பிடுங்க, அடுத்த செகண்டில் ரவுடி பாஸ்கர் அரைநிர்வாண பாஸ்கரானார்.

பூனை - புலி
அப்படியே நடுத்தெருவில் போதையில் புரண்டார்.. ஆனாலும் சொந்தக்கார பெண்கள் விடவில்லை.. அவரை சமாதானப்படுத்தி தரதரவென இழுத்து சென்றார்கள்.. கடைசியில் ஒரு பாயும் புலி, சமர்த்து பூனையாகி வீட்டுக்குள் சென்றுவிட்டது... இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகியும் வருகிறது.