"2 முறை அபார்ஷன்.. அதான் இப்படி".. போலீசாரையே திகைக்க வைத்த நர்மதா.. ஆடிப்போன கடலூர்
கடலூர்: 2 முறை அபார்ஷன் ஆகிவிட்டது.. வேற வழியில்லை.. அதான் இப்படி செய்துவிட்டேன் என்று நர்மதா என்ற இளம்பெண் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.
பண்ருட்டி விசூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்.. இவரது மனைவி பாக்கியலட்சுமி... இவருக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 2 நாளைக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.. ஆனால், அந்த குழந்தை மறுநாளே காணாமல் போய்விட்டது.
இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் கடலூர் புதுநகர் போலீசுக்கு தகவல் தரவும், போலீசார் விரைவான விசாரணையை மேற்கொண்டனர்.. அங்கிருந்த சிசிடிவி கேமிராவையும் ஆய்வு செய்தபோதுதான், ஒரு பெண் குழந்தையை எடுத்து கொண்டு செல்வது பதிவாகி இருந்தது..

குழந்தை
அந்த ஆதாரத்தை வைத்து, அப்பகுதியில் இருந்த ஆட்டோ டிரைவர்கள், பஸ் டிரைவர்கள் உட்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், சம்பந்தப்பட்ட பெண் குழந்தையுடன் புதுச்சேரி பஸ்ஸில் ஏறி சென்றது தெரியவந்தது. இதையடுத்து விரைந்து சென்று, அந்த பெண்ணை மடக்கி பிடித்து, குழந்தையையும் போலீசார் மீட்டுவிட்டனர்.. இவ்வளவும் வெறும் 3 மணி நேரத்தில் நடத்தி காட்டினர் நம் போலீசார்..!

திருட்டு
பின்னர் குழந்தையை திருடிய பெண்ணிடம் விசாரணை நடந்தது.. அப்போது அவர் சொன்னதாவது, "என் பெயர் நர்மதா.. என் கணவர் பெயர் சிலம்பரசன்.. லவ் மேரேஜ் செய்து கொண்டோம்.. கல்யாணம் ஆகி 2 வருஷம் ஆகிறது.. ஆனால், குழந்தைகள் இல்லை.. 2 முறை கர்ப்பமானேன்... அபார்ஷன் ஆகிவிட்டது..

அபார்ஷன்
அதனால் எங்களுக்கு இது பெரிய வருத்தத்தை தந்தது. 2வது முறை கர்ப்பமாகி அபார்ஷன் ஆனதை வீட்டில் சொல்லவில்லை.. கர்ப்பமாக இருப்பது போலவே நடிக்க ஆரம்பித்துவிட்டனர்.. என் கணரும் நம்பினார்.. இதை நம்பி 5வது மாசம் எனக்கு வளைகாப்பு செய்தார்கள்.. ஆனால் 5 மாசம் கழித்து, என்ன வயிறு பெரிசா ஆகலையேன்னு சந்தேகப்பட ஆரம்பிச்சிட்க்.

கைது
அதனால்தான் மாச மாசம் செக்கப் போற மாதிரியே, ஆஸ்பத்திரிகளுக்கு சென்று குழந்தை ஏதாவது கிடைக்கிறதா என்று தேடி வந்தேன்.. அதுக்குள்ளே மாசம் நெருங்கி கொண்டே வந்தது.. வேற வழியில்லாமல் கடலூர் ஆஸ்பத்திரியில் புகுந்து விட்டேன்.. பாக்கியலட்சுமி அட்மிட ஆகி இருநதார்.. அவரிடம் உருக்கமாக பேசி பழகினேன்.. பிறகுதான் குழந்தையை கடத்தினேன் என்றார்.