• search
கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பேஸ்புக்கில் ஆபாச மார்பிங் புகைப்படம்... இரண்டு உயிர்கள் பறிபோன சோகம் - உறவினர்கள் கொந்தளிப்பு

|
  பேஸ்புக்கில் ஆபாச மார்பிங் புகைப்படம்.... இருவர் தற்கொலை

  கடலூர்: காதலிக்க மறுத்தால் ஆசிட் வீசி கொல்கிறார்கள். கத்தியால் குத்தி கொல்கிறார்கள். கடலூரில் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு அந்த பெண் தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்துள்ளான் ஒரு கயவன். இளம்பெண்ணின் தற்கொலையால் மனமுடைந்த அந்த பெண்ணிற்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையும் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த சம்பவம் கடலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

  தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் பெயர் ராதிகா என்பதாகும். கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் அருகே உள்ள எ.குறவன்குப்பத்தை சேர்ந்தவர் நீலகண்டன் என்பவரின் மகளாவார். இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்சிஏ 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.

  அவரது அத்தை மகன் விக்னேஷ். இருவருக்கும் காதலித்து வந்தனர். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

  அதே ஊரில் வசிக்கும் வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவன் ராதிகாவிற்கு காதல் வலை வீசியுள்ளான். ஆனால் ராதிகா அதை கண்டுகொள்ளவில்லை.

  அத்துமீறும் நாடகக் காதல் கும்பல் மீது கடும் நடவடிக்கை தேவை!- டாக்டர் ராமதாஸ்

  ஆபாசமாக சித்தரித்த புகைப்படம்

  ஆபாசமாக சித்தரித்த புகைப்படம்

  ராதிகாவின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அதை பேஸ்புக்கில் வெளியிடவே, அது கடலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வைரலானது. வாட்ஸ்அப் குழுவிலும் பகிரப்பட்டது. இதனால் ராதிகா அதிர்ச்சியடைந்தார்.

  மிரட்டிய கும்பல்

  மிரட்டிய கும்பல்

  அவமானப்பட்ட ராதிகா தன்னை ஆபாசமாக சித்தரித்த பிரேம்குமாரை திட்டியிருக்கிறாள். இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார், கும்பலாக சென்று மிரட்டியிருக்கிறான். சாதியை சொல்லி திட்டியதாக கூறி பிசிஆர் பிரிவில் வழக்குப் போடுவோம், குடும்பத்தோடு உள்ளே போக வேண்டியிருக்கும் என்றும் மிரட்டினர். அசிங்கமாகவும் திட்டியுள்ளனர்.

  அவமானத்தில் தற்கொலை

  அவமானத்தில் தற்கொலை

  பாதிக்கப்பட்ட ராதிகா, தன்னையும், தனது குடும்பத்தினரையும் அந்த கும்பல் நிம்மதியாக வாழ விடாது என்று நினைத்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் காட்டுத்தீ போல பரவியது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராதிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் மருத்துவமனைக்கு அனுப்பினர்.

  மாப்பிள்ளையும் மரணம்

  மாப்பிள்ளையும் மரணம்

  ராதிகா இறந்த தகவலைக் கேள்விப்பட்ட உடனே அவரது தாய்மாமன் சேகரின் மகனான விக்னேஷ் தனது தோட்டத்தில் இருந்த மரத்தில் தூக்குப் போட்டுக்கொண்டு உயிரிழந்தார். நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் மரணம் விக்னேஷை அதிகம் காயப்படுத்தவே அதை தாங்கமுடியாத சோகத்தில் தூக்குப் போட்டுக்கொண்டதாக உறவினர்கள் கூறினர்.

  குற்றவாளி மீது நடவடிக்கை

  குற்றவாளி மீது நடவடிக்கை

  மனதில் வஞ்சக எண்ணம் கொண்ட பிரேம்குமார், ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட புகைப்படம் இருவரின் மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. அவனை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ராதிகா, விக்னேஷ் உறவினர்கள் கடலூர் விருத்தாச்சலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பிரேம்குமார் மீது நடவடிக்கை பாயுமா?

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Radhika hanged herself inside her house at Kuravan Kuppam village under Mandarakkuppam police station limits Neyveli around 3 pm on Monday. Nearly one hour later Vignesh hanged himself from a tree in a farm land police sources said.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more