கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. பஸ்ஸை வழிமறித்து.. டிக்டாக் செய்த அஜித்குமார் மீது வழக்கு பதிவு

டிக்டாக் வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    Tik Tok Pullingo Arrest:டிக்டாக் செய்த அஜித்குமார் மீது வழக்கு பதிவு

    கடலூர்: "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே" என்று பஸ்ஸை மறித்து நடுரோட்டில் படுத்து டிக்டாக் செய்த இளைஞர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    கடலூர் திட்டக்குடியை சேர்ந்தவர் அஜித்குமார். கடந்த சில நாட்களாக நிறைய டிக்டாக் வீடியோ செய்பவர். திடீரென ஒரு ஸ்டூலை போட்டு, பேனில் தூக்கு மாட்டி கொள்வதை போல டிக் டாக் செய்வார்.

    youth faces case for tik tok video viral

    பின்னர், பச்சிளம் குழந்தையை பாயில் படுக்க வைத்து அதற்கு மேல் கயிற்றில் தொங்குவது போல டிக் டாக் செய்வார்.. இவரது ஒவ்வொரு டிக்டாக்கையும் பார்த்தால் சுற்றி நிற்பவர்களுக்கு பகீர் பகீர் என்று இருக்கும்.

    இதில் உச்சக்கட்டமாக அஜித்குமார். ஒரு டிக்டாக் செய்ய போய், கடைசியில் போலீஸாரின் விசாரணைக்கு ஆளாகி உள்ளார். ஒரு அரசு பேருந்து வந்து கொண்டிருக்கிறது. அதன்முன் தன்னுடைய பைக்கை நிறுத்திவிடுகிறார். அந்த பைக் மீது ஏறி படுத்து கொள்கிறார்.

    அப்போது எம்ஜிஆர் பாட்டு, "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. இருட்டினில் நீதி மறையட்டுமே" என்று வாயசைத்து பாடுகிறார். கால் மீது கால் போட்டுக் கொண்டு, சிரித்தபடியே பாடுகிறார். இதை ரோட்டில் செல்பவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். ஆனால் யாருமே வந்து அவரை தடுக்கவில்லை, எச்சரிக்கையும் செய்யவில்லை.

    அரசு பஸ் போக வழியில்லாமல் அப்படியே நடுரோட்டில் நிற்கிறது. இந்த டிக்டாக் வீடியோ சோஷியல் மீடியாவில் அதிகமாக வைரலாகியது. விஷயம், கடலூர் எஸ்பி வரை போய்விட்டது. இப்போது அஜித்குமார் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளதாம்.

    English summary
    young man ajithkumar faces case for tik tok video viral by cuddalore police
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X