டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் முதல் நாளில் 1,91,181 பேருக்கு தடுப்பூசி..எந்த மாநிலத்தில் அதிகம் தெரியுமா..இதை படிங்க!

Google Oneindia Tamil News

டெல்லி: உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டமாக நாடு முழுவதும் நேற்று 191,181 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது.

அதிகபட்சமாக உத்தரப்பிரதேசதத்தில் 21,291 பேர் தடுப்பூசி போட்டனர். குறைந்த அளவாக லட்சத்தீவில் 21 தடுப்பூசி போட்டனர்.

முன்கள பணியாளர்கள் தவிர, கூடுதலாக இந்திய ராணுவத்தினர் உள்பட 3,429 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதார, மருத்துவ, முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

21,291 பேருக்கு தடுப்பூசி

21,291 பேருக்கு தடுப்பூசி

இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என 2 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டமாக நாடு முழுவதும் நேற்று 191,181 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசதத்தில் 21,291 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அடுத்தபடியாக ஆந்திராவில் 18,328 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். குறைந்த அளவாக லட்சத்தீவில் 21 தடுப்பூசி போட்டனர். தமிழகத்தில் 2,945 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

சிலருக்கு உடல்உபாதை

சிலருக்கு உடல்உபாதை

முன்கள பணியாளர்கள் தவிர, கூடுதலாக 3,429 இந்திய ராணுவம் மற்றும் இந்திய கடற்படை உள்ளிட்ட பாதுகாப்பு துறை சார்ந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசிகள் மீதான நம்பிக்கையின்மை காரணமாக பலர் தடுப்பூசி போட முன்வரவில்லை. டெல்லியில் சனிக்கிழமையன்று தடுப்பூசி போட்ட பிறகு 50 பேருக்கு சிறிய உடல் உபாதை ஏற்பட்டது. தடுப்பூசி போட்ட 22 வயதான ஒருவருக்கு கடுமையான உடல் உபாதை ஏற்பட்டதால் அவர் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மறுத்துவமனையில் உள்ளார்.

கோவாக்சின் வேண்டாம்

கோவாக்சின் வேண்டாம்

ராஜஸ்தான் மாநிலத்தில், 12,558 சுகாதார மற்றும் முன்கள தொழிலாளர்கள் தடுப்பூசி பெற்ற நிலையில், 21 பேருக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டது. டெல்லியின் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் மருத்துவர்கள் சங்கம், மருத்துவ கண்காணிப்பாளருக்கு எழுதிய கடிதத்தில் கோவாக்சின் தடுப்பூசி வேண்டாம். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் தடுப்பூசி போட வேண்டும் என்று கூறினர். மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனையின் ஊழியர்களும் இதே கோரிக்கையை முன்வைத்தனர்.

எம்.எல்.ஏ.க்களுக்கு தடுப்பூசி

எம்.எல்.ஏ.க்களுக்கு தடுப்பூசி

கோ வின் செயலி பயன்பாட்டின் தொழில்நுட்ப சிக்கல்களைக் காரணமாக மகாராஷ்டிராவில் தடுப்பூசி போடும் பணி ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் நிறுத்தப்பட்டுள்ளது. "இந்த பிரச்சினைக்கு மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் பட்டத் எம்.எல்.ஏ சுபாஷ் மொண்டல் மற்றும் கட்வா எம்.எல்.ஏ ரவீந்திரநாத் சாட்டர்ஜி ஆகியோர் தடுப்பூசி போட்டனர்.

இழப்பீடு வழங்கபப்டும்

இழப்பீடு வழங்கபப்டும்

பாரத் பயோடெக் நிறுவனம் தனது கோவாக்சின் தடுப்பூசியால் ஏதும் பாதிப்புகள் ஏற்பட்டால்இழப்பீட்டை வழங்குவதாகக் கூறியது. வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் தடுப்பூசி போடுவதாக ராஜஸ்தான் அரசின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி வியாழன், ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் தடுப்பூசி போடப்படாது.

English summary
The federal health department said yesterday that 191,181 people across the country had been vaccinated, making it the largest vaccination program in the world
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X