டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசியை பெற போகும் ஒரு கோடி பேர்.. யார் தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா 9 தடுப்பூசி இந்தியாவில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்படும் போது., கிட்டத்தட்ட ஒரு கோடி சுகாதார ஊழியர்கள் முதல் கட்டமாக தடுப்பூசி பெறுவார்கள் என தெரிகிறது. ஏனெனில் அவர்களுக்குத் தான் தடுப்பூசி வழங்குவதில் முதல் முன்னுரிமை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து 2வது கட்டமாக கிட்டத்தட்ட இரண்டு கோடி அரசு ஊழியர்கள் காவல்துறை, பாதுகாப்புப் பணியாளர்கள், நகராட்சித் ஊழியர்கள் மற்றும் பிற அத்தியாவசியத் பணியாளர்கள் ) தடுப்பூசி பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.

மூன்றாவது கட்டமாக 27 கோடி மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

1 crore health workers to get Covid vaccine first, says Govt

நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தின் போது இந்த விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், டெல்லி அரசு சுகாதார ஊழியர்களை முன்னுரிமை தடுப்பூசிக்கு சேர்க்கத் தொடங்கியுள்ளதுடன், அனைத்து சுகாதார வசதிகளையும் (நிறுவனங்கள், மருத்துவ இல்லங்கள், OPD கிளினிக்குகள் போன்றவை) தங்கள் ஊழியர்களின் பெயர்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியில் பேச எதிர்ப்பு தெரிவித்த திருச்சி சிவா.. சில நொடிகள் மௌனமாக இருந்த பிரதமர் மோடி!இந்தியில் பேச எதிர்ப்பு தெரிவித்த திருச்சி சிவா.. சில நொடிகள் மௌனமாக இருந்த பிரதமர் மோடி!

கொரோனா தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரதமர் நரேந்திர மோடி, கோவிட் -19 தடுப்பூசிக்கான காத்திருப்பு நீண்ட காலம் இருக்காது. சில வாரங்களில் இது தயாராக இருக்கும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர். விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் தடுப்பூசி விநியோகம் தொடங்கும்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை ஊழியர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்களை உள்ளடக்கிய முன்னணி ஊழியர்கள், மற்றும் மோசமான நிலைமைகளால் பாதிக்கப்பட்ட வயதானவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.

English summary
the government plans to include nearly one crore health workers in the first batch of vaccine receivers, whenever a Covid-19 vaccine is approved for use in India. This will be followed by nearly two crore frontline workers (police, security personnel, municipal workers and other essential workers), the government said on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X