டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Budget 2019: முத்ரா திட்டம்.. சுயஉதவிக் குழு பெண்களுக்கு ரூ. 1 லட்சம் வரை கடன்.. நிர்மலா சீதாராமன்

Google Oneindia Tamil News

டெல்லி: முத்ரா திட்டம் மூலம் சுயஉதவிக் குழுவினருக்கு தலா ரூ 1 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான அரசு வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் ஏற்கெனவே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது 2019-2020-ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

1 woman in every self-help group will be allowed a loan of Rs I lakh

அப்போது அவர் பேசுகையில் பெண்கள் சுய உதவிக்குழுவிற்கு முக்கியத்துவம் தரப்படும். அதிகபட்சமாக இந்த குழுக்கள் வாயிலாக தலா ரூ.1 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும்.

ஜன்தன் வங்கி கணக்கு மூலமாக இதைப் பெறலாம் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த பியூஷ் கோயல் பெண்களுக்கான எந்த திட்டம் குறித்தும் குறிப்பிடவில்லை. 26 வாரங்களுக்கு பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என கோயல் அறிவித்திருந்தார்.

ஆனால் நிர்மலா சீதாராமனோ பெண்கள் முன்னேற்றத்துக்கான பல்வேறு நலத்திட்டங்களை வெளியிட்டுள்ளார். மேலும் பெண்கள் இல்லாத துறை என்றே ஒன்று இல்லை என்றும் பெருமிதம் பொங்க தெரிவித்தார். அப்போது பெண் எம்பிக்கள் உள்பட அனைவரும் மேஜையை தட்டி வரவேற்றனர்.

English summary
Each woman in every self-help group will be allowed a loan of Rs I lakh under Mudra scheme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X