டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக சபாநாயகர் வேட்பாளர் ஓம் பிர்லாவுக்கு, அதிமுக சப்போர்ட்.. மொத்தம் 10 கட்சிகள் கைகோர்ப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் லோக்சபா சபாநாயகர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ள ஓம் பிர்லாவுக்கு, அதிமுக உள்ளிட்ட 10 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

16வது லோக்சபா சபாநாயகராக இருந்த சுமித்ரா மகாஜன், தேர்தலில் போட்டியிடாத காரணத்தினால், பதினேழாவது லோக்சபாவிற்கு, புதிதாக ஒருவரை சபாநாயகராக முன்மொழியும் தேவை பாஜகவுக்கு எழுந்தது.

10 parties including AIADMK extend support to BJP speaker candidate OM Birla

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த, இரண்டாவது முறை எம்பியான, ஓம் பிர்லாவை, சபாநாயகர் பதவிக்கு முன்மொழிந்துள்ளது பாஜக. ஒருமனதாக சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கு பாஜக விரும்புகிறது.

சபாநாயகர் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், ஒரு வேளை காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகர் வேட்பாளர் நிறுத்தப்பட்டால், தேர்தல் நடைபெறும். அல்லது, ஓம் பிர்லா, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்.

இதனிடையே, அதிமுக, பிஜு ஜனதா தளம், அகாலிதளம், சிவசேனா, தேசிய மக்கள் கட்சி, மிசோ தேசிய கூட்டணி, லோக் ஜன சக்தி கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அப்னா தளம் ஆகிய கட்சிகள், பாஜக வேட்பாளருக்கு, தங்கள் ஆதரவை தெரிவித்து உள்ளன என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி டெல்லியில் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பாஜக கூட்டணி அரசு பெரும்பான்மையுடன் உள்ள நிலையில் சபாநாயகர் பதவிக்கான போட்டியில் காங்கிரஸ் களமிறங்காது என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Union Min Pralhad Joshi on Om Birla's candidature for LS Speaker: BJD, Shiv Sena, National People's Party, Mizo National Front, Akali Dal, Lok Janshakti Party, YSRCP, JDU, AIADMK, & Apna Dal have signed the proposal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X