டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் இருந்து ஒலித்த குரல்.. 10% கோட்டாவிற்கு எதிராக பொங்கிய தம்பிதுரை.. அனல் பேச்சு!

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு எதிராக நேற்று அதிமுக எம்.பி தம்பிதுரை லோக் சபாவில் பேசியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% கோட்டா-வீடியோ

    டெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு எதிராக நேற்று அதிமுக எம்.பி தம்பிதுரை லோக் சபாவில் பேசியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

    பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதா இன்று ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான மசோதா நேற்று லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மசோதாவிற்கு தமிழகத்தை சேர்ந்த கட்சிகள் பெரிய எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த மசோதா இன்று நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    அதிமுக எதிர்ப்பு

    அதிமுக எதிர்ப்பு

    இந்த மசோதாவிற்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்தாலும் தமிழகத்தை சேர்ந்த முக்கிய கட்சிகள் எதுவும் ஆதரவு தெரிவிக்கவில்லை. முக்கியமாக லோக் சபாவில் இருக்கும் தமிழக அதிமுக எம்.பிக்கள் யாரும் இந்த மசோதாவிற்கு ஆதரவு அளிக்கவில்லை. மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்கெடுப்பு நடக்கும் முன் இவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    தம்பிதுரை பேச்சு

    தம்பிதுரை பேச்சு

    இந்த மசோதாவிற்கு எதிராக அதிமுக எம்.பியும், லோக் சபா துணை தலைவருமான தம்பிதுரை பேசினார். அதில், பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு என்பது கொஞ்ச கூட சாத்தியம் இல்லாதது. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் முன்னேற்றம் அடைய நிறைய வழிகள் இருக்கிறது. அதைவிட்டுவிட்டு ஏன், இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.

    சாதி ஒழிந்தால்

    சாதி ஒழிந்தால்

    நாட்டில் சாதி ஒழிந்தால் எல்லாம் ஒழியும். சாதி ஒழிந்தால் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒழியும். அரசு சாதி ஏற்றத்தாழ்வை அழிக்கத்தான் அரசு முயல வேண்டும். இந்த இடஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரான பெரிய அடி இந்த சட்டம். முதலில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 69% இடஒதுக்கீட்டை உறுதி செய்யுங்கள்.

    மோசமான கொள்கை

    மோசமான கொள்கை

    அரசிடம் மோசமான பொருளாதார கொள்கை இருக்கிறது. இதனால் பல கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் இருக்கிறார்கள். பொருளாதார கொள்கையில் தோல்வி அடைந்த அரசு, இப்போது இடஒதுக்கீடு என்று மக்களை ஏமாற்ற பார்க்கிறது. மக்களை முன்னேற்ற வேண்டும் என்றால் பொருளாதார கொள்கைகளை மாற்ற வேண்டும்.

    மோடி ஏமாற்றம்

    மோடி ஏமாற்றம்

    பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் எல்லோர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவதாக கூறினார். 15 லட்சம் ரூபாய் போட்டாலே போதும் எல்லோரும் பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள். ஆனால் அரசு அதை செய்யாது. இது தேர்தலுக்காக பாஜக நடத்தும் நாடகம் என்று தம்பிதுரை குறிப்பிட்டார்.

    English summary
    10% reservation bill: MP Thambi Durai strikes hard in the Lok Sabha against the bill.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X