டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உயர்ஜாதியினருக்கு 10% கோட்டா.. லோக்சபாவை தொடர்ந்து, ராஜ்யசபாவிலும் சட்டத் திருத்தம் நிறைவேறியது

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதா இன்று ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% கோட்டா-வீடியோ

    டெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதா இன்று ராஜ்ய சபாவில் நிறைவேறியது

    பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு வேலைவாய்ப்பை மற்றும் கல்வியில் 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவு எடுத்து உள்ளது. இதற்காக அரசியல் சாசன (124வது திருத்தம்) மசோதா நேற்று லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.

    லோக்சபாவில் அந்த சட்டம் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்த நிலையில் இன்று ராஜ்யசபாவில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

    எப்படி இருக்கிறது

    எப்படி இருக்கிறது

    இந்தியாவில் இதுவரை 49.5 சதவிகித இடஒதுக்கீடு மட்டுமே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் சட்ட திருத்தம் மூலம் 69 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரத்தில் 68 சதவிகித கோட்டா உள்ளது. இந்த நிலையில் கூடுதலாக 10 சதவிகித இட ஒதுக்கீட்டை நாடு முழுக்க கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    சட்ட திருத்தம்

    சட்ட திருத்தம்

    உச்ச நீதிமன்ற தீர்ப்பு படியும், மண்டல் கமிஷன் பரிந்துரை படியும் 50 சதவிகிதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு கொண்டு வர முடியாது. இதனால் மத்திய அரசு சட்ட திருத்தம் மூலம் கூடுதல் இடஒதுக்கீட்டை கொண்டு வர உள்ளது. மொத்தம் 19 கோடி உயர் சாதியினர் இதனால் பலன் அடைவார்கள் என்று கூறப்படுகிறது.

    தாக்கல் செய்யப்பட்டது

    தாக்கல் செய்யப்பட்டது

    நேற்று லோக் சபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. லோக் சபாவில் மசோதாவுக்கு ஆதரவாக 323 வாக்குகள் விழுந்தன. இதனால் லோக் சபாவில் மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. மசோதாவிற்கு எதிராக 3 பேர் வாக்களித்தனர்.

    இன்று தாக்கல்

    இன்று தாக்கல்

    இதையடுத்து சட்ட திருத்த மசோதா இன்று ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. திமுக, அதிமுக கட்சி எம்பிக்கள் இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நிலைக்குழுவிற்கு அனுப்ப திமுக எம்பி கனிமொழி தீர்மானம் கொண்டுவந்தார். ஆனால் போதிய உறுப்பினர்கள் ஆதரவு அவருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து விவாதத்திற்கு பிறகு, இரவு 10.20 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    அதிக ஆதரவு

    முதலில், நிலைக்குழுவிற்கு இந்த மசோதாவை அனுப்ப வேண்டுமா என்பதற்கு முதலில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அனுப்ப கூடாது என்று அதிக வாக்குகள் பதிவாகின. இதையடுத்து, சட்டத் திருத்த மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மொத்தம், 172 எம்பிக்கள் வாக்களித்தனர். அதில், 165 எம்பிக்கள் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். 7 பேர் எதிர்த்து வாக்களித்தனர். அரசியல் சாசன சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற 3ல் 2 பங்கு எம்பிக்கள் ஆதரவு தேவை. ஆனால் 96 சதவீதம் ஆதரவு கிடைத்ததால், எளிதாக மசோதா நிறைவேறியது. சட்டத் திருத்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    English summary
    10% reservation for poorer sections of Upper Caste bill will pass in Rajya Sabha today morning.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X